Skip to content
ஒரு கிராம நிர்வாகத்திலும், சுய ஆட்சியிலும் பங்கு கொள்ளும் அந்த கிராம மக்கள்
அனைவரும் சம உரிமைகளின் செல்வாக்கோடும், உற்சாகத்தோடும்,
கிராம பொது நல முன்னேற்றத்துக்கு பாடுபடுவார்கள்
அந்த கிராம ஆட்சியின் சபைக்கு தலைவானக தேர்ந்தெடுப்பவன்
அந்த கிராம மக்களின் நன்மையையும் நன்மதிப்பையும்
மதித்து நடக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
சர்வ சக்திவாய்ந்த அரசு தன்னுடைய பிரநிதியை அனுப்பி
அந்த கிராம ஆட்சியை நேரடியாக நடத்தினால் அந்த ராஜ பிரதிநிதிக்கு
கிராமமும் தெரியாது கிராம மக்களின் உணர்வும் தெரியாது
அந்த அதிகாரிக்கு தெரிந்தது எல்லாம் வரி, வசூல் மட்டுமே,
கிராமத்தின் முன்னேற்றமோ, கிராம மக்களின் உரிமைகளையோ,
நன்மைகளையோ, கொள்கைகளையோ, சுதந்திர குரல்களையோ
மதித்து நடக்க வேண்டிய தேவை ஏதேச்ச அதிகாரத்தின் பிரதிநிதிக்கு இருக்காது.
உரிமைக்குரல் எழும்போதெல்லாம் வலுவான புறகணிப்பு
ஒன்று தான் ஜனங்கள் பெறும் தலைவிதியாக விடும்.
அரசு சக்தியாகி ஆட்சியாளர்களிடம் அதிகாரம் குவிய, குவிய
ஜனங்களின் உரிமை, வாழ்வு, செல்வாக்கு, எல்லாம் பறிபோய்விடும்.
எவ்வளவுக்கு எவ்வளவு பல கிராமங்களின் பல பேரின் கைகளில்
குறைவான அதிகாரங்கள் பிரித்து வைக்கப்படுகிறதோ
அவ்வளவுக்கு அவ்வளவு மக்கள் சமமான உரிமையோடும், சுதந்திரத்தோடும் இருப்பார்கள்.
ஒரு விதத்தில் சொன்னால் மத்திய அரசின் அதிகாரத்தை குறைத்து
கிராம ஆட்சியின் அதிகாரத்தை பெருக்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால்
நம் மத்திய அரசு என்பது பல கிராம சபைகளின் பிரதிநிதிகளை கொண்ட
வெறும் ஐக்கிய சபையாக இருந்து
பொது பாதுகாப்பிற்க்கும், பொது காரியங்களின் கவனிப்புக்கு மட்டுமே தேவைப்படும்.
அது கிராம சுயாட்சியில்
தனிப்பட்ட உரிமை வாழ்விலோ, கலாசாரத்திலோ
நேரடியாக தலையிடும் சர்வாதிகாரம் மத்திய அரசுக்கு இருக்ககூடாது.
Go to Top
I agree