யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஒன்றை
அமைக்க இடம் கொடுத்துவிட்டால்
மக்கள் அனைவரும் அடிமை, செக்கு மாடுகள், ஆகிவிடுவார்கள்
அப்படி பட்ட அரசாங்கம், அரசு, சுயநலத்திற்காகத்தான் பாடுபடும்.
வரலாறு அதுதான் சொல்கிறது
யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம்
ஜனங்களுக்காக செயல்பட்டதாக எந்த நாட்டு சரித்திரமும் கிடையாது.
அப்ப
ஏகாதிபத்தியம் கூடாதுன்னு சொல்லுறயா
ஏகாதிபத்தியம்ன்னா என்ன ?
ஒரே தலைமை புரிஞ்சுக்கோ
நம்ம நாட்டுக்கு ஏகாதிபத்தியம் சரியாகாது
ஏகாதிபத்தியம் என்பது சிந்திக்காத சிந்திக்க மறுக்குற அடிமை
முட்டாள் பிரஜைகளை மட்டுமே உருவாக்கும்
பழைய அடிப்படைகளை அழித்துவிடும்
பாரம்பரியம் என்பது இல்லாமல் போய்விடும்
அது முடிவில் அந்நியஆதிக்கத்தை வரவேற்றும்
அதற்க்கு ரத்தின கம்பளத்தை விரிக்கும்.
அந்நிய ஆதிக்கம் என்றாவது ஒரு நாள் அழிவு பாதைக்கு வழி வகுக்கும்.
அதுதான் நம் தேசத்தின் சரித்திரம்.
அப்ப தலைமை எப்படிவேணும்ன்னு நினைக்கிற
கிராம சுயாட்சிவேணும்ன்னு நினைக்கிறேன்
அப்ப தான் ஜனங்களின் உரிமைகளும் தனி மனிதனின் சுதந்திரமும்,
நல்வாழ்வும் பெற முடியும்
ஏகாதிபத்திய முறை அரசியல்னால
அத குடுக்க முடியாது
அதனால அது ஒழிக்கப்படவேண்டும்.