தீப ஒளியோக முறையில் மூச்சை உள்ளே இழுக்கும் போது,
உள்ளே நிலை நிறுத்தும் போதும்,
அவைகளுக்கான உச்சரிப்புகளை வாயாலும்,
பின்னர், மனதாலும், பின்னர் அஜாப முறையில் ஆக்ஞையிலும் சொல்ல –
பருவுடன் ஜோதி வடிவாகவும்,
இதயத்தில் அங்குஷ்ட பிராண ஜோதியையும் காண்பதுடன்,
பிரணவ தேகத்தையும் அடையலாம்.
இரண்டு கைகால் விரல்களைக் கட்டி மல்லாந்து படுத்து,
மனதைச் சிதறவிடாது நிறுத்தி, மவுனத்தில் அழுந்தினால்,
மனம் சுழுப்தியில் அடங்கும்.
இந்த நிலையில், ஐங்கோல உச்சரிப்பை ஏழு ஸ்வரங்களில் எழுப்ப வேண்டும்.
இவ்வாறறு பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து செய்தால்,
கதவு, சுவர் போன்ற திடப் பொருள் எதுவும்
மானிட உடலின் போக்குவரத்தைத் தடை செய்யாது.
இதுதான் பரகாயப் பிரவேசம் எனப்படும்.