( ஆதான ) கருத்தரிக்கும் நேரத்தில் சந்திரன் இரட்டை ராசியிலும்,
சூரியன் ஒற்றை ராசியிலும் இருந்து ஒருவரை ஒருவர் பார்க்க அலித் தன்மை ஏற்படும்.
சனி இரட்டை ராசியிலும், புதன் ஒற்றை ராசியிலும் இருந்து
ஒருவரை ஒருவர் பார்க்க அலியாம்.
செவ்வாய் ஒற்றை ராசியிலிருந்து சூரியன் இரட்டித்த ராசியிலும்
இருந்து செவ்வாய் சூரியனைப் பார்த்தாலும்,
சந்திரன் இரட்டை ராசியிலும், லக்னம் ஒற்றை ராசியிலிருந்து
செவ்வாயினால் பார்க்கப்பட்டாலும்,
சந்திரன் இரட்டை ராசியிலும்,
புதன் ஒற்றை ராசியிலும் இருக்க, செவ்வாய் பார்த்தாலும்,
புருஷ அம்சத்தில் லக்னம், சந்திரன், சுக்ரன் இருந்து
செவ்வாயால் பார்க்கப்பட்டாலும் பிறக்கும் குழந்தை அலியாக இருக்கக்கூடும்.
இவை ஆதான லக்னத்திலிருந்து பார்க்க வேண்டியவையாகும்.
சந்திரன், புதன், செவ்வாயால் பார்க்கப்பட்டாலும்,
க்ஷீண சந்திரன் செவ்வாயுடன் 6, 8, 12 – ல் இருந்தாலும்,
புதன், சுக்ரன் லக்னத்திலிருக்க செவ்வாயிலிருந்தாலும்
,லக்னத்தில் குருவை செவ்வாய் பார்த்தாலும் லஜ்ஜை இல்லாதவன்.
சந்திரன், செவ்வாய் 7 ல் இருந்து குரு பார்க்க லஜ்ஜையுள்ளவன்.