ஆண் அல்லது பெண்ணுக்கு அல்லது இருவருக்கும் குருபலம் உள்ளதா என்று பார்ப்பது வழக்கம். இருவரில் ஒருவருக்கு குருபலம் இருந்தாலும் போதுமானது. மேலும் ஆணுக்கு குரு பலம் தேவையில்லை என சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. பொதுவில் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,9,11 – ல் குரு கோசர ரீதியாக இருக்கும் காலங்களில் குரு பலம் வந்துவிட்டதாக பொருள். பொதுவாக திருமண கால பலன்களாவன — 1 – ல் குரு வரும்போது திருமணம் நடக்க வம்ச விருத்தி பாதிக்கும். பிரிவுகள் உண்டாகும். 2 – ல் குரு திருமணமானால் தனதான்ய விருத்தி, சுகம் அபிவிருத்தி அடையும். 3 – ல் குரு நிலைமை குறையும். பிரச்சனைகள் தோன்றும். 4 – ல் குரு திருமணத்தில் சுகம் குறையும். பந்து ஜன விரோதம் நேரலாம். சொத்தில் வில்லங்கம் ஏற்படும் .5 – ல் குரு திருமணத்தில் கெளரவம் கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். 6 – ல் குரு வரும் போது மண முடிக்க நோய் ஏற்படும். அரசாங்க தொல்லை நேரலாம். 7 – ல் குரு நிற்க திருமணமானால் தீர்க்க செளமாங்கல்யம் ஏற்படும். 8 – ல் குரு வரும்போது மணம் நடக்க குலப் பெருமை குறையும். வாரிசு ஏற்படுவதில் சிரமம் நேரும். 9 – ல் வரும் போது திருமணமானால் சுகம், பாக்யம் ஏற்படும். 10 – ல் குரு வரும்போது திருமணம் நடக்க இடமாற்றம், கடன் ஏற்படும். 11 – ல் குரு வரும்போது திருமணம் நடக்க தனலாபம் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் உண்டு. 12 – ல் குரு வரும்போது விவாகம் நடக்க சந்ததி ஏற்படாமல் போகலாம். கெளரவ பாதிப்பு ஏற்பட கூடும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaJanuary 3, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகுருபலம்.குலப் பெருமைகெளரவம்தனலாபம்திருமண காலம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:உரையாடலின் ஒரு பகுதி 1NextNext post:உரையாடலின் ஒரு பகுதி 2Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 10May 14, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 9May 13, 2026நட்சத்திர எதிரிடையில் நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 8May 12, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 7May 11, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026