ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி சிந்திக்க ஒருவர் இருக்கிறார்
என்பது மிகவும் சந்தோஷமான விஷயம்.
அது மன சந்தோஷத்தையும், பலத்தையும் தருகிறது என்பது முற்றிலும் உண்மை.
அதன் அடிப்படையில் தோன்றியது தான் குடும்பம்.
அதன் அங்கத்தினர்களான கணவன், மனைவி உறவு
அதன் அடிப்படை மூல வேர் என்பது
உனக்காக எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன்,
உன்னை பற்றி உனக்கு வேண்டியதை நான் சிந்திப்பேன்
அது மட்டுமல்ல செயல்படுவேன் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆசை,
எல்லாம் தான் குடும்பம் என்பது.
ஆனால் தற்சமய சமுதாய சூழலில் ஏற்பட்ட அதிவேக மாறுதல் காரணமாக
சிந்தித்தலும் செயல்படுதலும் சுயத்தின் அடிப்படையில்
தனக்கு என்று சென்றுவிட்டதால்
குடும்பம் எனும் கோயிலின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்டது
என்பதே நிதர்சனமான உண்மை.
காலமாற்றம்,
வாழ்வின் சுவைகளை உடைத்தெரியும் தகவல் தொழில் நுட்பம்,
காதல் வெறும் உறுப்புகளின் உறவு என்று நம்பும் கூட்டம்,
நுகர்வு கலாசாரத்தின் சுத்த சுயநலம்,
மனிதர்களை தீவுகள் ஆக்கிடும் சுய சார்பு தன்மை.
Yes..it’s very true