முந்தைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும்
ஒப்பிட்டுப் பார்த்தால்
எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கிறது.
மாறுதல்கள் காலத்தை மீறி நின்ற போதும்,
அண்மை கால மாறுதல்கள் விண்கல வேகத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலமைக்கு காரணம் அதித விஞ்ஞான வளர்ச்சியுமாயும் இருக்கலாம்
இந்த வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் மாறுதல்களும்,
சுயவாழ்க்கையை கூட யோசிக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடப்பட்டுவிட்டது .
இதை நாம் சிறிது ஆழ்ந்து கண்டிப்பாய் சிந்திக்கவேண்டும்.
சந்தோஷத்திற்கு,
மன நிம்மதிக்கு,
மனமகிழ்ச்சிக்கு,
மனநிறைவுக்கு,
எதிர்மறையான வளர்ச்சியால் என்ன பயன்?
எதிலும் வேகம்,
எதிலும் போட்டி,
எல்லா இடத்திலும் பொறாமை
தன்னை நிலை நிறுத்திக்கொள்ள பண்புகளை விடவேண்டியதாகவும்,
விற்க வேண்டியதாகவும் உள்ள சூழ்நிலை
இது எந்த விதத்தில் சரியாய் வரும்.
இது தனிமனிதனில் ஆரம்பித்து
ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஆக்கிரமித்து
ஒரு தலைமுறையையே ஏன் பல தலைமுறைகளையே புரட்டிப் போட்டுவிடுமே,
இதற்கெல்லாம் அடிப்படை காரணம்
மனிதநேயம் மறக்கப் பட்டு விட்டது.
அது பரஸ்பர நேசம் இல்லாத நிலையை உருவாக்கி விட்டது.
அதனால் நம்பிக்கையின்மை படிப்படியாக வளர்ந்து
கணவன், மனைவி,
தாய், தந்தை
குழந்தைகள்
இவர்களிடம் கூட நம்பிக்கை இல்லாது போய்விட்டது.
இந்த விஷயம் தற்போதுள்ள தலைமுறைகளில்
வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிவிட்டது.
இது வளர்ச்சியின் விபரீதம்.
இதன் முடிவு ……