பிறகு
அதற்குரிய தன்மையை நாம் நமக்குள் உருவாக்கிக்கொண்டு
அந்த பணியில் இறங்குவோம்
இங்கு அதற்குரிய தன்மைகள் என்பதன் பொருள் என்னவென்றால்
உணர்ச்சிபூர்வமாக இல்லாதிருத்தல்
பாரபட்சமற்ற நோக்கு
எதையும் சாரத சுதந்திரமான தெளிவான ஒரு நோக்கு
எதையும் உள்ளது உள்ளபடி கண்டறிவது
இது முதல் நிலை
அடுத்து
உள்ளது உள்ளபடி
புரிந்து கொள்வது
இது இரண்டாவது நிலை
நமது கருத்துக்களை பிறருக்கு தெரியப்படுத்துவது
என்றால்என்ன என்பதை
முதலில் நாம் சந்தேகமில்லாமல் புரிந்துகொண்டிருக்கவேண்டும்
நமது கருத்துக்கள் பிறருக்கு தெரியப்படுத்துவதற்கு
நாம் மொழியை வார்த்தையை பயன்படுதியாகவேண்டும்
ஆனால்
நாம் வார்த்தைகளோடு நின்று விடாமல்
அதையும் தாண்டி செல்லவேண்டியுள்ளது
வன்முறை என்பது வெளி விஷயம் மட்டுமல்ல
நமக்கிடையே உள்ள உறவுகளில் கூட வன்முறை உள்ளது