எல்லாம் ஒன்று தான்,
ஆனால்
எதுவும் ஒன்றல்ல.
இதை புரிந்துகொள்ள
வாழ்வது சுலபமாகும்
வாழ்க்கையும் சுகமாகும்
இதை எப்படி புரிந்து கொள்வது
பலரின் வாழ்க்கையை பார்த்து
அனுபவப்பட்டவர்களின் எழுத்துக்களை
படித்து, சிந்தித்து
நமக்குள்ளும்
நம்மை சார்ந்தவர்களிடமும் பேசி
என்ற படிகளின் மூலமே புரிந்து கொள்ள முடியும்
இதை தவிர வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை
உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்
கேட்டுக்கொள்கிறேன்