வளர்ச்சி விளைவுகளை பொருத்தது அல்ல செயல்களை பொருத்தது.
வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலும் வாழ்க்கையை உயிரூட்டும் சாதனம் தத்துவம்
ஆனால்
அது கூட பல மாறுபாடுகளை தனக்குள் கொண்டுள்ளது.
அது மனிதனின் சுபாவத்திற்க்கு ஏற்றபடி
மாறுபட்ட உணர்ச்சிகளையும், அர்த்தங்களையும் தரவல்லது.
ஏதும் விளையாத பாலைவனம்,
பாலைவனம் வளர்ச்சியுற்றதா, இல்லை
கங்கை நதியோரம் உள்ள செழிப்பான மலர் சோலைகளும்,
தோப்புகளும் வளர்ச்சியுற்றதா அனுமானிக்க முடிவதில்லை,
ஏனென்றால்,
கதிரவன் தனது கடுமையை
பாலைவன மணலில் எத்தனையோ காலங்கள் செலுத்தினாலும்
அந்த மணல் வெண்மையாகவே உள்ளது
கருத்து நிறம் மாறுவதில்லை.
ஆனால் கங்கை நதியோரம்
அந்த கதிரவனின் கடுமையான வெப்பம் சென்றால்
அவை சருகாகிவிடுகிறது.
இதில், வாழ்ந்தது எது,
வீழ்ந்தது எது
அனுமானிக்க முடியாத நிலையிலேயே
அன்றிலிருந்து இன்றுவரை வாழ்க்கை உள்ளது.
இதை புரிந்து கொள்வது என்பது
அவரவர் அறிவு, புத்தி, யுக்தி, அனுபவம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.
Nice