Skip to content
நெளலி — NAULI
You are here:
- Home
- யோகா
- நெளலி — NAULI
நெளலி
உட்டியானா செய்யச் செய்ய நெளலி தானாக வந்துவிடும்.
கால்களை அகற்றி நின்று,
கைகளைப் படத்தில் காட்டியபடி தொடை மேல் அமர்த்தி
உடலை முன்னால் குனிந்து கொள்ளவும்.
சுவாசம் முழுமையும் மெதுவாய் வெளியில் விட்டு
வயிற்றை உட்டியானா செய்யவும்.
பின் தளர்ச்சியைடைந்த வயிற்றின் சதைகளை இறுகக் கட்டிச் செய்யவும்.
இப்படி இறுக்கியவுடன்
மேல் சென்ற வயிறு தானாக முன்னால் துருத்தும்
பின் வயிறு தடிபோல் முன்வந்து நிற்கும்.
சில வினாடிகள் நின்ற பிறகு
சதையை நழுவவிட்டு
சுவாசத்தை உள்ளிழுத்து நிமிர்ந்து இளைப்பாறவும்.
ஒருமுறைக்கு 5 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.
வலது கை, இடது கையத் தொடைகளில் அதிகமாக
அழுத்திக் குடலை வலது பக்கம், இடது பக்கம் தள்ளலாம்.
பலன்கள் —
உன்னதமான ஆசனம்.
இழந்த ஆண்மையை மீண்டும் பெறலாம்.
விந்து ஒழுகுவதைத் தடுக்கும்.
விந்து கட்டிப்படும்.
வயிற்றுக் கிருமி, பூச்சி ஒழியும்.
மலச்சிக்கல் நீங்கிப் பசி உண்டாகும்.
குடலில் அமிலங்கள் உண்டாகாது.
வயிற்றுவலி, குடல்புண் குணமடையும்.
உடலில் தேஜஸ் உண்டாகி புத்துணர்வு ஏற்படும்.
விந்து நோய், வெள்ளை, வெட்டை நீங்கி இளமை மேலிடும்.
மனக்கட்டுப்பாடு உண்டாகும்.
பெண் வியாதி தீரும்.
ஜீரண உறுப்புக்கள் அனைத்திற்கும் நல்ல ரத்தம் கிடைக்கும்.
Go to Top