Skip to content
எவரை பார்க்கும் போது நீ எல்லாவற்றிலும் சாந்தமான நிலையை உணருகின்றாயோ,
எவரின் அண்மை உனக்குள் பரவசத்தை உண்டாக்குகிறதோ
, எவரின் சிந்தனை உனக்குள் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தருகிறதோ,
என்ன செய்து கொண்டிருந்தாலும் யாருடைய சிந்தனை உனக்குள் ஓடிக்கொண்டு
உனக்கு சந்தோஷத்தை தருகிறதோ
எவருக்கு வேண்டி நீ உன்னை முழுவதும் அர்ப்பணிக்க தோன்றுகிறதோ,
எவரின் பார்வை ஸ்பரிஸம் உனக்கு உடலிலும் உனக்குள்ளும் மாறுதலை உருவாக்குகிறதோ
அவரே உன் குரு.
இதை சரியாய் சிந்தித்தால்
இந்து மதத்தில் கணவனிடம் மனைவி இருக்க வேண்டிய நிலையை ஒட்டி இருப்பது தெரிய வரும்
அதனால் தான் மனைவியின் குரு கணவன் என்று இந்து மதம் வகுத்திருக்கிறது போலும்.
சரி இனி நாம் நம் விஷயத்திற்க்கு வருவோம்.
இது ஆகிற காரியமா இந்த அவசர உலகில்
தனக்குள் என்ன நடைபெறுகிறது என்று ஊன்றி கவனிக்காதவர்களால்
மேலே சொன்ன விஷயங்களை அறிந்து அல்லது உணர்ந்து கொள்வது சாத்தியமா?
அதுவும் பெண் விடுதலை ஆணுக்கு பெண் சமம் என்ற கால கட்டத்தில் இருக்கும் நமக்கு
மேலே குறிப்பிட்ட விஷயத்தை புரிந்து உணர்ந்து கொள்ள
கொஞ்சமாவது வாய்ப்பு உண்டா என்ற வினா வந்தால்
நிச்சயமாய் இல்லை என்ற பதில் தான் வரும்
அந்த பதில்தான் சரியானதும் கூட.
ஆன்மீக தேடல், அல்லது மன உணர்வுகளை நெறிபடுத்துதல் போன்ற விஷயங்களுக்கு
குரு தேவை என்று சொல்லப்பட்டி ருக்கிறது.
சரி நிறைய குருமார்கள் தற்போது இருக்கிறார்கள்
நிறைய பேர் நிறைய பேரை குருவாக சொல்கிறார்கள்
இப்போது நாம் என்ன செய்கிறோம்
நிறைய பேர் விகிதாசார கணக்கில்
அதிக அளவு குருவாய் சொல்பவர்களை நாமும் குருவாய் கொள்கிறோம்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்
மேலே குறிப்பிட்ட எந்த உணர்வுகளும் நமக்கு ஏற்படாமலேயே
நாம் எல்லோரும் அதிக அளவான பேர்கள் சொல்கிறார்கள்
என்ற காரணத்திற்காகவே நாம் குருவை தேர்ந்தெடுத்து,
தேர்ந்தெடுத்தவரை குருவாக கொள்கிறோம்.
இதில் என்ன விஷயம் மறைந்திருக்கிறது என்றால்
முதலில் தன்னையும்,
பிறகு பிறரையும் ஏமாற்றும் செயல் மட்டுமே இருக்கிறது,
வேறென்ன இருக்கிறது.
தன்னுள் அனுபவம் உண்டாகாதவரை
குருவை தேடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் விதி.
அந்த அனுபவமே முதல் பத்தியில் சொல்லிய விஷயங்கள்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்
அதாவது தனக்குள் மாறுதல் ஏற்பட்டு
அந்த மாறுதலை அறிந்து
அந்த மாறுதலுக்கு காரணமானது எது எவர் என்று புரிந்து உணர்ந்து கொண்டால்
நாம் சீடன் ஆகலாம்
(இங்கு எவர் என்பது ராமகிருஷ்ண பரமஹம்சர், பாபா கஜானன் மகராஜ், போன்றோர் எது என்பது சிலந்தி, தேனி, போன்றவை )
அந்த சமயத்தில் நமக்கு நம் குரு நம்மிடம் வருவார்.
அல்லது நாம் நம் குருவிடம் இருப்போம்
நாம் தேடி அலைய வேண்டியது குருவை அல்ல
நமக்குள் மறைந்து ஒளிந்து கொண்டிருக்கும் சீடனை
அந்த சீடரை நாம் கண்டு கொண்டால்
நம் குரு நம்மிடம் வருவார்.
அதை செய்யாமல் வேறு எதை செய்தாலும்
குரு, சீடன் என்ற சொல் இருக்கும்.
வார்த்தை இருக்கும்
ஆனால் அதற்க்குண்டான உண்மையான அர்த்தம் இருக்காது.
அதனால் இந்த நொடி முதல்
குருவை தேடுவதை விட்டுவிட்டு
உங்களுக்குள் உள்ள சீடரை தேட முயலுங்கள்
வெற்றி பெறுங்கள்.
Go to Top
I do my best to feel what is really going in me….thank you ayya