உலக சாஸ்திரத்தில் முழுமையாக வெற்றி அடைந்தது என்று எதுவுமே இல்லை. அவரவர் சிந்தனைக்கு எது பிடிக்கிறதோ அந்த பாதையில் சென்று பிரபஞ்ச சக்தியின் ஆசீர்வாதத்துடன் வெற்றி கொள்கிறார்கள். நமது உடல் பஞ்சபூதங்களோடு இணைந்து இயங்குவதை அறிந்தோம். நமது உடல் 72 ஆயிரம் நாடி நரம்புகளால் ஆனது. இதில் முக்கியமான 10 நாடிகள், இந்த பத்தில் முக்கியமானது மூன்று ( 3 ) அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை அது போல் வாயுக்கள் பத்து ( 10 ) இந்த பத்து வாயுக்களில் ஐந்து ( 5 ) வாயுக்கள், இந்த மூச்சும் கூட பஞ்சபூதங்களின் அடிப்படையில் தான் இயங்குகின்றது. பிராணன் — இதயத்தில் நிலை பெற்று இயங்குவது. பசி, தாகத்தை உண்டாக்கி உணவை ஜீரணிக்கச் செய்கிறது. அபானன் — குடல் பகுதியிலிருந்து கழிவுகளை வெளியேற்றுகிறது. வியானன் — இரத்தத்தோடு கலந்திருப்பது. உதானன் — வாயில் உமிழ் நீரை சுரந்து உணவின் தன்மையை பிரிக்கின்றது. சமானன் — உடல் உஷ்ணத்தை சீராக வைக்கிறது. இந்த ஐந்து வகையான வாயுவும் நம் மூக்கின் வழியாக சென்று காற்றுக் குழாய்க்குள் ( நுரையீரல் ) இறங்குகிறது. நுரையீரல் என்றாலே மூச்சுக் குழாய் என்பதுதான் இந்த மூச்சுக் குழாயானது சுருங்கி கொள்ளுதல் அல்லது புகைப் பிடிப்பதால் ஏற்படும் அழற்சியால் ஆஸ்துமா மற்றும் புற்று நோய் ஏற்படுகிறது. நாம் மூச்சை நன்றாக இழுத்து வெளிவிடும்போது காற்றின் அளவு ஐந்து லிட்டர். ஆனால் நாம் சாதாரணமாக மூச்சை இழுக்கும்போது அரை லிட்டர் எடுத்துக் கொள்கிறோம். அதனால் நமது மூச்சுக் குழாய் நன்கு இயங்க தினமும் 10 நிமிடமாவது மூச்சு இழுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இதை படித்தவுடன் உங்களுக்கு சந்தேகம் ஏற்படலாம் என் நுரையீரல் நம் பயிற்சி இல்லாமல் தானாக இயங்காதா? என்று இயங்கும், இந்த பிரபஞ்சத்தில் படைப்பில் எதுவும் முடியாதது இல்லை, இந்த பயிற்சிகளின் மூலம் நமக்கு நோயின்றி வாழ அதே சக்திதான் இதையும் வழி காட்டுகிறது. நமது உடல் நிலையும் மூச்சின் நிலையும் சில நேரங்களில் சரியில்லாத போது நம்மால் சரியாக சிந்திக்க முடியாமல் சிந்தித்ததை செயல் படுத்த முடியாமல் போகிறது. நாம் எதை நினைக்கிறோமோ அதுவாக மாறுவோம் என்று வேதங்கள் கூறுகின்றது. நம்மை நல்வழிப்படுத்துவதும், தீய வழியில் கொண்டு செல்வதும் நம் மனம் தான். இந்த மனதை நம் வசப்படுத்துவது மூச்சுக் காற்று. இந்த மூச்சானது நன்றாக இயங்க நமது உடலில் உள்ள மூச்சு குழாய்களுக்கு நல்ல பயிற்சிகள் மூலம் 5 வாயுக்களையும் ஒரு நிலைப்படுத்தி நமது உடலை நாமே பாதுகாப்போமாக. Category: மருத்துவம்By admin@powerathmaOctober 6, 2020Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMநாடிகள்நுரையீரல்வாயுக்கள் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கடவுளைப்பற்றி காமராசரின் சிந்தனைNextNext post:முட்சங்கன் (azima tetracantha)Related Postsஅனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82July 25, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 81July 24, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 80July 23, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 79July 22, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 78July 21, 2024செவ்வாய் 12January 22, 2024