பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத
மிடுக்கையும் காட்டாதீர்கள்.
சொன்னதே சரி, செய்ததே சரி, என பிடிவாதம் பிடிக்காதீர்கள்
இங்கே கேட்பது அங்கேயும், அங்கே கேட்பது இங்கேயும்
சொல்லுவது விடுங்கள்.
மற்றவர்களுக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்
அடுத்தவர் இறங்கி வரவேண்டும், என்று காத்திராமல்,
நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.
பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவர்களின்
கருத்துக்களுக்கு காது கொடுங்கள்.
பின்பு அதற்கு பதில் கொடுங்கள்.
எந்தப்பேச்சும், செயலும் யார் மனதையும்
காயப் படுத்தாமல் இருக்கட்டும்.
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்று எதிர்
பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
முடிந்தவரை விட்டுக்கொடுங்கள்,
விட்டுக்கொடுப்பவர்கள்
கெட்டுப்போவதில்லை.
கெட்டுபோகிறவர்கள்
விட்டுக்கொடுப்பதில்லை.
இவைகளை கடை பிடிக்க ஆரம்பிக்கும் போது
ஏமாற,
காயப்பட, அவமானப்பட, நஷ்டம் அடைய, வருத்தம் அடைய ,
போன்ற நிலைகளை அடைவீர்கள்
அதை பற்றி எல்லாம் கலக்கம் அடையாமல்
முயற்சி பண்ணறது தப்பில்லையே
முயன்று பாருங்கள்
முடிவு என்னவென்று சொல்லுங்கள்