Skip to content
1970,80,90 -ம் காலங்களில் வாழ்ந்தவர்களின்,
வாலிபர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் வரை
அனைவரையும் தன் குரலால் வசீகரித்து
உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திய
மாபெரும் கான கந்தவர்வன்
பாடலிலேயே சிரிக்கவும், சிணுங்கவும், உள்ள கலையை
முழுமையாக கைவர பெற்ற உன்னத பாடகர்.
ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா இந்த பாடலில்
விழுந்தவன் இன்னும் ஏனோ என்னால் எழ முடியவில்லை
சிந்து பைரவி படத்தில் வரும் தண்ணிதொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி
என்ற பாடலை
நான்
ஏன் டைரக்டர் பாலச்சந்தர் இளையராஜா SPB க்கு கொடுக்கவில்லை
அவர்தானே அதற்க்கு பொருத்தமானவர்
என்று நண்பர்களுடன் கோபத்திலும், வாதத்திலும் கழிந்த நாட்கள் உண்டு.
மைதிலி என்னை காதலியில் வரும்
நாளும் உந்தன் உறவை பாடலும்,
காதல்ஒவியத்தில் வரும் சங்கீத ஜாதி முல்லையும்
70, 80, 90 – ல் வாலிபர்களாய் இருந்து இப்போது மத்திய வயதை கடந்திருந்தாலும்
மறக்க முடியாத பாடல்கள் என்பதை மறுக்க முடியாது
இளையராஜா இசையமைக்க, வைரமுத்து எழுத,
நடிகர் மோகன் மைக் பிடிக்க SPB, பாட
என்று அந்த படம் இருந்தால் அந்த படம் 100 நாள்
என்கின்ற எழுதாத சட்டமே இருந்த காலம்.
அது ஒரு காலம் .
கமல் என்றால் SPB
ரஜினி என்றால் மலேசியாவாசுதேவன்,
என்று அணி பிரிந்து இருந்த காலமும் இருந்தது
எனக்கு தோணும் நாமெல்லாம் வாயை திறந்தால் ஒசைதான் வரும்
ஆனால் SPB திருவாய்மலர்ந்தால் இசையாய் வரும் என்று
இது எப்படி என்றால்
தில்லானாமோகனாம்பாள் படத்தில் வரும் சிவாஜிசாரிடம்
மனோரமா கேட்பார்கள்
உங்க நயானத்திலதான் மட்டுதான் இந்த சுரம் வருதா ( சப்தம் ) என்று கேட்பதுபோல.
SPB -யிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்,
அவருடைய எளிமை
இனிமையாய் பழகும் தன்மை,
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அவர் அணுகும் முறை
சிரித்த முகம்
இவையெல்லாம் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவை.
கர்வம் என்பது அவரிடம் கிடையாது.
சங்கராபரணம் பட பாடலுக்கு பின் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டது
தெலுங்கில் எழுதி பாடிய காலம் போய்
தமிழிலேயே எழுதி பாடியது எல்லாம்
அவர் தொழிலின் மீது வைத்திருந்த பக்தி
இடை விடாத உழைப்பு, போன்றவற்றை நம் மனதில் நிறுத்துகிறது
இவரின் பாடல்களை எப்போதும், எந்த சூழ்நிலையில் கேட்டாலும்
மனம் உற்சாகத்தில் துள்ளும்.
வரும் போதே சங்கீத வரம் வாங்கி வந்த ( இறைவன் அவருக்கு கேட்காமலேயே ) மாபெரும் மனிதர்
அவர் தன்னுடைய பூலோக பயணத்தை நிறுத்திக்கொண்டார்.
இது நமக்கெல்லாம் வேதனையாயும் அதிர்ச்சியாயும் இருந்தாலும்
நாம் அவரின் பாடல்களின் குரலில் அவரை கண்டு
சாந்தியும், சமாதானமும், திருப்தியும் அடைந்து
அண்ணாரது ஆன்மா
எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் தஞ்சமடைய பிரார்த்திப்போம்.
இப்போது அவர் இறைவனிடம் ஊஞ்சல் பாட்டு பாடிக்கொண்டிருப்பார்.
இறைவனின் சிரித்தமுகம்
SPB யின் நினைவில் இருக்கும் நம் அனைவருக்கும்
தெரிகிறது.
Go to Top
பழைய காலத்திற்கு என்னையும் அழைத்துச் சென்றது ஐயா மிகவும் அற்புதமாக இருக்கிறது வணக்கம் ஐயா