புறமனத்தில் எழும் எண்ணங்களும், திட்டங்களும் நிறை வேறலாம்,
நிறைவேறாமலும் போகலாம்.
ஏனென்றால் புறமனதின் எல்லைக்கோட்டில் இருக்கும்
நினைவிற்கு பந்தபாசம் உண்டு.
ஆனால் புறமனதிலிருந்து அகமனதிற்குக்
கொண்டு செல்லும் எண்ணங்களும், திட்டங்களும்
பந்தபாசங்களுக்கு அப்பாற்பட்டவை,
தோல்வி அறியாதவை.
எனவே அவை நிறைவேறியே தீரும்.
இது மனேதத்துவச் சட்டம்.