மூன்று பிரிவுகளைக் கொண்ட தொண்ணுற்றாரு மனத் தத்துவங்களில்,
இரண்டாம் தத்துவம் மொத்தம் முப்பத்தைத் தன்னுள் அடக்கியது
இந்த முப்பதில் தச வாயுக்கள் பத்து
– அதில் பிராணனும் ஒன்று.
இந்தப் பிராணன், லலாட மத்தியில் உருவாகி,
சித்ரஹாச நாடியில் பரவி,
மூலாதாரத்திற்கு வந்து,
மணி பூரக நாபியைச் சந்தித்து,
இடகலை, பிங்கலைகளில் ஒடி,
ஏழு சூட்சும நாடிகளையும் சந்தித்து,
கபாலத்தைச் சுற்றி,
நாசியில் பன்னிரண்டங்குலம் எழுந்து,
நாலங்குலம் விடுவித்து,
எட்டங் குலம், நீண்டு,
தான் நின்ற இடத்தில் வந்து நிலைக்கும்.
இந்த பிராணன்60 நாழிகைக்கு 21,600 சுவாசமாகி இயங்குகிறது.
இதில் 7,200 சுவாசம் அழிந்து விடும்.
இந்த சுவாச அளவு குறையக் குறைய வலுவும்,
கூடக்கூடத் தளர்ச்சியும் உண்டாகும்.
சுவாசம் இப்படி இயங்குகிறது என்பதை நாம் கவனிக்காமல் நமக்கு எப்படி தெரியும்
முக்கியமாய் தெரியவேண்டிய விஷயம் இது
அத்தனை தான் சொல்லமுடியும்