ஓர் ஊரில் ஏழை ஒருத்தன் இருந்தான். ஒருநாள், பிள்ளையார் சந்நிதிக்கு வந்த அவன் , ”கணேசா! இது உனக்கே நல்லாருக்கா? நான் நாள் தவறாம வந்து, உன்னை கும்பிட்டுட்டுப் போறேன். என்ன பிரயோசனம்? உன்னை எட்டிக்கூடப் பார்க்கிறதில்லை, என் பக்கத்து வீட்டுக்காரன். ஆனா பாரு, நேத்து அவனுக்கு லாட்டரிச் சீட்டுல ஐம்பதாயிரம் ரூபா பரிசு விழுந்திருக்கு!” என்று புலம்பிவிட்டுப் போனான். ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த அவன், ”பிள்ளையாரப்பா! நீ பண்றது ரொம்ப அநியாயம்! ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள் வந்து உன்னை வணங்கிட்டுப் போற எதிர்த்த வீட்டுக்காரனுக்கு இன்னிக்கு லாட்டரியில இரண்டு லட்சம் விழுந்திருக்கு. தினம் வந்து கும்பிட்டுட்டுப் போற என் விஷயத்துல நீ கொஞ்சம் கண் திறக்கக் கூடாதா? ” என்று குறைப்பட்டுக்கொண்டான். மேலும் சில நாட்கள் கழிந்திருக்கும். இந்த முறை வந்தவன், பிள்ளையாரைத் திட்டவே ஆரம்பித்துவிட்டான் . ”நீயெல்லாம் ஒரு கடவுளா? பாரு… இன்னிக்கு மேல் வீட்டுக்காரனுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு. இதுவரைக்கும் எனக்கு ஒரு நயா பைசாகூட நீ அருள்பாலிக்கலையே? உன்னையெல்லாம் கும்பிட்டு என்ன பயன் அவன் முடிப்பதற்குள் குறுக்கிட்டு, ஏகக் கடுப்புடன் ஒலித்தது அசரீரி… ”மடையா! முதல்ல போய் ஒரே ஒரு லாட்டரிச் சீட்டாவது வாங்கித் தொலை! அப்புறம் வந்து புலம்பு!” Category: பல்சுவை கதம்பம்By admin@powerathmaSeptember 16, 20204 CommentsTags: அருள்ஏழைபரிசுபிள்ளையார்லாட்டரி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:௮ரைகீரை (AMARANTHUS TRICOLOR)NextNext post:சீத்தா (Annona squamosa)Related Postsவாழ்க்கை சுவையானது.November 30, 2024அதிசய காந்த கண்ணாடிAugust 10, 2024இரும்புக் குதிரைகள்August 9, 2024காந்தளூர் சாலை போர் 4August 8, 2024காந்தளூர் சாலை போர் 3August 7, 2024காந்தளூர் சாலை போர் 2August 6, 2024
ஐயா நமஸ்காரம், நமக்கு நாமே சிந்திக்காமல் பிறரை குறை சொல்லக் கூடாது என்பதை இந்த கருத்தின் மூலம் உணர வேண்டும். Reply
ஐயா நமஸ்காரம், நமக்கு நாமே சிந்திக்காமல் பிறரை குறை சொல்லக் கூடாது என்பதை இந்த கருத்தின் மூலம் உணர வேண்டும்.
Nice
வணக்கம் ஐயா இப்படியும் புத்திசாலிகள் இருக்கிறார்கள்
கடவுளை வேண்டுவதோடு முயற்சித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.