Skip to content
நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.
இதோ கால அட்ட வணை:
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம்.
இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.
காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம்.
இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.
காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.
காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம்.
வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம்.
இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம்.
இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்.
சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.
பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம்.
மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.
மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம்.
தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு.
இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை – உச்சந்தலை முதல்
அடிவயிறு வரை உள்ள
மூன்று பாதைகள் இணையும் நேரம்
அமைதியாக உறங்கலாம்.
இரவு 11 முதல் 1 வரை – பித்தப்பை நேரம்.
அவசியம் உறங்க வேண்டும்.
இரவு 1 முதல் 3 வரை – கல்லீரல் நேரம்.
ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம்.
கட்டாயம் தூங்க வேண்டும்.
இந்த அட்டவணையை பயன்படுத்திப்பாருங்கள்
பல விஷயங்கள் புரிய தொடங்கும்.
Go to Top
Nice information thank you ayya
Will try to follow this and keep my body healthy
I will try to follow .
Nice information ayya….I try my level best to follow ayya.thank you