காமு -அரசியலிலே நீடிச்சு நிலைச்சு நிக்கணும்
அப்படின்னா என்னென்ன குணம் இருக்கணும்
கோமு- நான் சொல்லுவேன் உனக்கு புடிக்காது
காமு -இல்ல சொல்லு நான் கேக்கறேன்
கோமு -சரி சொல்லறேன் கேளு
உறவாடி கெடுக்கும் உத்தம குணம்,
சுயநலம்,
நயவஞ்சகம்,
நம்பிக்கை துரோகம்,
ஏளனம்,
பொறாமை,
பேராசை
இதல்லாம் சாதரண மனிதர்களுக்கும் இருக்கும்,
ஆனா
விசேஷமாய்
அரசியல்
நடத்துபவர்களிடம் இருக்கும்.
அந்த விசேஷம்,
ராஜ தந்திரத்தில் குள்ளநரியாகவும்,
அரசியல் கட்சிகளில் அடிக்கடி கட்சிமாறும் பச்சோந்தியாகவும்,
மத நம்பிக்கைகளில் கூடுவிட்டு கூடுபாயும் வேதாளம் போலவும்,
பதவி மோகத்தில் வேட்டைநாய் போலவும்,
பண பசியில் மலைப்பாம்பு போலவும்,
பழி தீர்ப்பதில் மதயானை போலவும்,
மத்யஸ்தம் செய்வதில் ருத்திராட்ச பூனை போலவும்
இருப்பதே அந்த விசேஷங்கள்.
என்ன உனக்கு புரிஞ்சுதா
காமு -யோசிக்கறேன்
கோமு-சரி
நல்ல உத்துப்பாரு
அப்புறம்
உணரப்பாரு
Nice