சிம்மம்.
1 முதல் 10 பாகைக்குள் — நர நாற்கால் பட்சிதிரேக்காணம்–
கழுகு, நரி, நாய் போன்றதாயும், அழுக்கடைந்த துணியுடன் கூடியவன்.
தாய், தந்தையை விட்டுப் பிரிந்தவன் போல கதறுவான்.
சூரியன் நாயகன் –
ஸ்திரீ கிரகம்
பலம் கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திரேகாணம் –
குதிரையைப் போல் உள்ளவன்.
வெண்ணிறமான மாலையை தலையில் அணிந்தவன்.
எளிதில் அண்ட முடியாதவன்,
ஆயுதம் தரித்தவனும் வளைந்த நுனி மூக்கை உடையவனும்,
மான்தோல் கம்பளம் போன்றவற்றில் இருப்பவன்.
குரு நாயகன்
ஆண் கிரகம்–
பலம் தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நர நாற்கால் ஆயுத திரேக்காணம் –
கரடி முகம், குரங்குக்கொப்பான சேஷ்டையவன்
நீண்ட மீசை, சுருட்டையான மயிர்கள் சுழி உடையவன்
பழம், மாமிசத்தை உண்பவன் , செவ்வாய் நாயகன்,
அலி கிரகம்
பலம், பாதம் வரை.