கடகம்.
1 முதல் 10 பாகைக்குள் — நாற்கால் புருஷதிரேக்காணம்–
இலை, கிழங்கு, பழம் இவற்றைத் தரித்தவனும்,
யானைக் கொப்பான சரீரமுடையவனும்,
காட்டில் வாசனை நிரம்பிய இடங்களில் வசிப்பவனும்,
பெருத்த கால் உள்ளவனும்,
பன்றிக் கொப்பான முகம் உள்ளவனும் ஆவான்.
சந்திரன் நாயகன் —
ஸ்திரீ கிரகம்
பலம் கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்–
சிரசில் தாமரை புஷ்பங்கள் உள்ளவளும்,
சர்மங்கள் கூடியவளும்,
தனிமையான இடத்தை அடைந்தவளும்
கதறும் குணம் உள்ளவளும் ஆவாள்.
செவ்வாய் நாயகன் –
ஆண் கிரகம்
பலம் – பாதம் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நரசர்ப்ப திரேக்காணம்,
சுவர்ணமயமான ஆபரணங்களை உடையவன்,
பாம்பினால் சுற்றப்பட்டவன்,
மனையாளுக்கு நகை செய்வதற்கு வேண்டி சமுத்திரத்தில் பிரயாணம் செய்பவன்.
குரு நாயகன்
அலிக்கிரகம்
பலம் – பாதம் வரை.