மிதுனம்.
1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ திரேக்காணம்
– நல்ல ரூபத்துடன் கூடியவள்,
நகை செய்வதில் பற்று உள்ளவள்.
சந்ததி இல்லாதவள்.
உயர தூக்கப்பட்ட கைகளை உடையவள்.
மாதவிடாய் தோஷம் உள்ளவள் ( அ) காம பீடையுள்ளவள்,
ஊசியால் செய்யக்கூடிய நெசவு முதலிய காரியத்தை விரும்புவாள்.
ஸ்திரீ கிரகம்
பலம் கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத பட்சி திரேக்காணம் –
தோட்டத்தில் வசிப்பவன்.
கவசமுள்ளவன். ( கண்ணாடி போன்ற ) ஆயுதம் உள்ளவன்.
சூரத்தன்மையுள்ளவன்,
கருடனை போன்ற மூக்கு உள்ளவன்.
விளையாட்டு புத்திரன்.
நகை பணம் இவ்விஷயங்களில் கவலையை உடையவன்,
சுக்கிரன் நாயகன்,
ஆண் கிரகம்
பலம் தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நர ஆயுத திரேக்காணம் –
அலங்கரிக்கப்பட்டவன்,
அதிகமான ரத்தினம் உள்ளவன்,
பாணப்பை கவசம் தரித்தவன்,
வில் ஆயுதத்துடன் கூடியவன்,
நாட்டியம், வாத்தியம், சித்திரம் எழுதுதல் போன்ற கலைகளில் சாமார்த்தியம் உள்ளவன்.
கவிதை,
பாடல்களை இயற்றுபவன்,
சனி நாயகன்
– அலி கிரகம்
பலம் – பாதம் வரை.