ஜோதிட விதிகள்
இலக்கினத்தில் சனியிருந்து சந்திரனாவது, சுக்கிரனாவது 7 – ல் நிற்க, அழிந்து போனவளுக்குப் பர்த்தாவாவான்.
இலக்கினாதிபதியுன் புதன் கூடினால், முந்தின பிள்ளை பெண் பெறுவன்.
இலக்கினாதிபதி பாபருடன் கூடி ராசியிலாவது 8 – லாவது இருந்தால்,
சரீரத்தில் சிரங்கு, கொப்பளம், அரையாப்பு கிரந்தி இரணமுள்டாகும்.
இலக்கினாதிபதி, சூரியன் செவ்வாய்கில், சுடு சாதத்தின் மேற் பிரியன்.
இலக்கினாதிபதி, சந்திரனாகில் தித்திப்பில் விருப்பன்
இலக்கினாதிபதி புதனாகில், புளிப்பில் விருப்பன்.
இலக்கினாதிபதி வியாழனாகில் தயிரில் விருப்பன்
இலக்கினாதிபதி சுக்கிரனாகில், சமபுசிப்பு
இலக்கினாதிபதி சனியாகில், காட்டுக்கீரை மேல் விருப்பம்
இலக்கினாதிபதியுடன் இராகு – கேது கூடினால் சக்திபூசை செய்து மாமிசம் புசிப்பான்.
இலக்கினம் மகர, கும்பமாகில், அதில் சனியிருந்தால் சகல பாக்கியமுண்டு.
இலக்கினம் கடகமாகில், அதில் சந்திரனிருந்தால்
பூமி பாலகனாகவும் யோகவானாகவும் இருப்பான்.