உத்தானபாத ஆசனம் — UDANAPADA ASANAM
நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும்
. இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் ( விறைப்பாக இல்லாமல் ) தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி மெதுவாக இறக்கவும்.
சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப் பிடிக்க நேரிடும்.
ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யவும்.
பலன்கள் –
அடிவயிறு இறுக்கம் கொடுக்கும்.
தொந்தி கரையும்.
ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்யும்.
உச்சி முதல் பாதம் வரையுள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்பெறும்.
வாயு உபத்திரவம் நீங்கும்.
பெண்கள் மகப்பேறுக்குப் பின் இவ்வாசனம் செய்தால் தொந்தி விழுவது நீங்கி வயிறு சுருங்கும்.