எதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் – 6
இலக்கினம் முதற்கொண்டு இலக்கினாதிபதியிருக்கும் வீடாகவும் எண்ணிக் கண்ட தொகையை இலக்கினாதிபதியைத் தொட்டு எண்ணி வருகையில்அந்த வீடு பாவர்வீடாகில் தரித்திர யோகமென்றும்,
சுபர்கள், வீடாகில் தனவானாகவுமிருப்பன். ஜன்ம லக்கினத்திற்கு இரண்டு, ஐந்து பன்னிரண்டு இந்தவிடங்கள் சுபர் வீடாகில் தனவானுமாவான்.
ஜன்மத்தில் சனியும், நாலாமிடத்தில் சந்திரனும், ஏழாமிடத்தில் செவ்வாயும், பத்தாமிடத்தில் சூரியனும், குருவும், புதனும், சுக்கிரனும் இவர்கள் கூடி ஒரு வீட்டில் நிற்கப் பிறந்த ஜாதகன் இராஜயோகத்தை அனுபவிப்பான்.
எட்டு, ஆறில் பாபக்கிரகங்களிலிருந்து இலக்கினத்தைப் பாராதிருக்கப் பிறந்த சேய்க்குச் செல்வமுண்டாம் அல்லது மேற்சொல்லிய நால்வரும் மேற்கண்ட இராசிகளில் நீசராசி அல்லது மேற்கண்ட ஸ்தானங்களில் நீச்சமானவர்களோடு சேர்ந்து இருந்தாலும் தனவானாவான்
சந்திர இலக்கினத்திற்கதிபதி உச்ச ராசியிலாவது அல்லது நீச ராசியிலாவது இருக்கில் தனவானாம்.
சந்திரனோடு உச்சம் பெற்ற நற்கோள்கள் சேர்ந்திருக்க குடும்பஸ்தானதி முச்சமாகி சுபக்கிரகங்கள் நிற்க. பிறந்த சேய்க்குச் செல்வமுண்டென்றறியவும்
ரிஷபத்தில், சந்திரன், விருட்சிகத்தில் குரு நிற்க, தனவானாம்,
சுக்கிரன் வீட்டில் வியாழன் நிற்க, மகரத்தில் குஜன் நிற்க, குருவோடு, பூர்வபட்சத்து சந்திரன்கூட, புதனும், குருவும் கூடி நிற்க, இலக்கினந்தன்னில் சுக்கிரனுமிருக்க, நிறைந்த தனவானாகவும்,
கல்விக்கரசனாகவுமிருப்பான். சுக்கிரன் உச்சம் பெற, வியாழன் இலக்கினத்திலிருக்க சந்திரனைப் பாவர்கள் பார்க்க, பிரபலமாய்த் தனம் படைப்பான்.