கோமு; நீங்கதான் என் குரு
காமு ; அப்படியெல்லாம் நினைக்காதே அது பொய்
கோமு ;என்ன அப்படி சொல்லிடீங்க
காமு ;வேற எப்படி சொல்லணும்
கோமு ; உங்களையே கதின்னு வந்துருக்கேன்
காமு ;குரு எல்லாம் என்ன ஆனாங்கன்னு எனக்கு தெரியும் அதனால தான் சொல்லறேன் நான் உனக்கு மட்டுமல்ல யாருக்கும் குரு இல்ல
கோமு; குரு எல்லாம் என்ன ஆனாங்க அதை கொஞ்சம் விளக்கமா சொன்னிங்கன்னா பரவாயில்லை
காமு ;சொல்லறேன் சொல்லறேன் அதுதானே என் வேலை
தம்பி என்னை குருவாக்காதே, இந்த புண்ணிய பூமியில் எதைனையோ குருமார்கள் தோன்றியுள்ளார்கள். அவர்களுடைய உன்னதமான உபதேசங்கள் உபயோகப்படாமல் போனதற்கு காரணம் என்ன தெரியுமா? அவர்களுடைய சிஷ்யர்கள்தான்.
சரியாக சிந்தித்துப் பார்த்தால் மனித குலம் அனைத்திற்கும் ஞானத்தை தந்தவர்கள் குருமார்கள். மனிதகுலம் அனைத்தும் ஒன்று என்பார் வீடு, வாசல்கள், உற்றார், உறவினர்களை உதறி விடுவார், அன்ன விசாரமின்றி கோவண ஆண்டிகளாக சுற்றித் திரிவார்.
பொருளாசை கூடாது என்பார்.
சுட்டெரிக்கப்படும் மனிதனுக்கு ஆறடி நிலம் கூடத் தேவையில்லை என்பார். ஜாதி, மத, பேதம் பாரதே என்பார். நான் என்கிற அகங்காரத்தை ஒழிப்பார். தன்னுடைய உபதேசப் பாடல்களில் தன்பெயரை சொல்லுவது கூட நான் என்கிற அகங்காரத்தை தரும் என்று கட்டை ( உடம்பு ) என்றே சொல்லிக்கொள்வர்.
ஆனால், அந்த குரு காலமான பிறகு அவருடைய சிஷ்ய கோடிகள் என்ன செய்வார்கள் தெரியுமா?
அவருடைய பெயரால் நாடெங்கும் குரு பீடங்களும், மடாலயங்களும் கட்டுவார்கள்.
அவருடைய தேக உருவத்தை பொற்சிலையாக்கி, அவருடைய ஜாதி, மத ஆச்சார்யப்படி குரு பூஜை செய்வார்கள்.
அவருடைய பெயரால் மடங்களுக்கு பொருள்கள் சேகரிப்பார்கள்.
பூமிகளை வளைத்து, வளைத்து வாங்குவார்கள்,
குரு மகானின் பெயரையும், உபதேசங்களையும் மிகச் சரியான வியாபாரப் பொருளாக ஆக்கிவிடுவார்கள்.
பிறகு அந்த தர்ம சொத்துகளை தங்களுடைய உறவினர்களும், தங்களுடைய மதத்தினரும், தங்களுடைய ஜாதியினரும் வாழையடி வாழையாக அனுபவிக்க வேண்டுமென்று வழி வகுப்பார்கள்.
இவ்வாறு, குருமகானின் உபதேசங்கள் அவருடைய சிஷ்ய கோடிகளாலேயே அர்த்தமற்றதாக்கப்பட்டு மக்களால் அலட்சியப் படுத்தப்பட்டு, சீக்கிரம் முடித்துவிடுவார்கள்.
அதனாலேயே தம்பி சிஷ்ய பெருமக்களை நான் விரும்பு வதில்லை. தேவைப்பட்டால் நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம்.