கேந்திர திரிகோண
சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் பகை நீச்சம் பெற்றிருந்தால் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் சுபாதிபத்தியத்திற்கு பாபியாகவும், பாப ஆதிபத்தியத்திற்கு எதிர்பாராத நன்மையைத் தரும் யோக கிரகமாகவும் மாறி ஜாதகரின் வாழ்க்கையில் சுபாசுபப் பலன்களை வழங்கும் என்பது விதி.
சூரியன், செவ்வாய் சனி ஆகிய கிரகங்கள் 1,4,7 10ல் அமர்ந்து இதர கிரகங்களால் பார்க்கப்படும் போதும், இவர்களுடன் சேரும் போதும் அந்தந்த கிரகங்களின் ஆதிபத்தியம் அடிப்படையில் இவர்களுக்கு சம்பந்த பலன் ஏற்படும்.
இந்த சம்பந்த பலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் கேந்திரத்தில் இருக்கும் கிரகங்களுடன் சேரும் போதும்கிரகங்களின் பலத்தின் அடிப்படையில் பலன்கள் அமையும்
.
கேந்திர பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைபெறும் காலத்தில் நல்ல பலன்கள் அனுபவத்துக்கு வரும்.
கேந்திரத்தில் உள்ள கிரகங்களுடன் சம்பந்த பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைமுறையில் வரும் போது அந்தந்த கிரங்களின் ஆதிபத்திய பலத்தில் கேந்திர பலம் பெற்ற கிரகத்தின் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் மாறுதல்கள் ஏற்படும்.
பலம் பெற்றவர்கள் பாக்கியங்களோடு வாழும் வாழ்க்கை அமையும்
புதன், குரு ஆகிய சுபக்கிரகங்கள் லக்கினத்தில் அமர்ந்திருந்தால்(முதலாம் திரிகோணம்) மிக்க பலசாலிகளாக பூரண பலத்தோடு விளங்குகிறார்கள்.
உடலாகிய சந்திரன் வளர்பிறை காலத்தில் திரிகோணமாகவும், தேய்பிறை காலத்தில் கேந்திரமாகவும் அமர்ந்திருப்பது மிக மிக உத்தமம்.
சாயாக் கிரகங்களாகிய ராகு, கேதுக்களில் ராகு 4ம் இடத்திலும் கேது 10ம் இடத்திலும் அமர்ந்து இருப்பது மிக மிக உத்தமம்
இப்படியாக கிரகங்களின் பலம் அமைந்து இவர்களுடைய திசை வரும் காலம் ஜாதகர்களுக்கு பிரபலமான ராஜயோகம் ஏற்படும்.
இதற்கு மாறுபட்ட வகையில் கேந்திரங்களில் பாபக் கிரகங்களும், திரிகோணங்களில் சுபக் கிரகங்களும் அமர்ந்து சுபக்கிரக பார்வை, சேர்க்கை அமையப் பெற்றவர்களுக்கும் வாழ்க்கையில் உயர்வுகள் அமைகின்றன.
லக்கினாதிபதிகள் மேற்கண்ட விதமாக கேந்திர திரிகோணங்களில் அமர்ந்து இருந்தாலும் மேற்கண்ட வரிசைக் கிரமமே யோக லட்சணமாகும்.