அன்பு வெளிப்படும் விதம்
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்…
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் இரண்டாவது ஆப்பிளையும் கடித்தாள்
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்…
உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்.
.அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்….
எவ்வளவு அனுபவமும் இருந்தாலும்
எவ்வளவு அறிவு இருந்தாலும்
ஒருவரை பற்றி கணிக்கும் போது உணர்வை பார்க்கும் பழக்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் அடுத்தவரின் செயலை அப்போது தான் சரியாக கணிக்க முடியும்
அறிவை கொண்டு கணித்தால் தவறு ஏற்படவும் வருத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது