நாலில் ஒருத்தரும் இல்லாவிட்டால் அவன் பிறந்த வீட்டிற்கு சமீபத்தில் பாழாயிருக்கும
.நாலாமிடத்திற்கு முன்னே பாபரிருந்தால் பிறந்த வீட்டிற்கு மேற்கே பாழாயிருக்கும்பாழாயிருக்கும்.
இலக்கினத்திற்கு 2, 4, 10, 12 இந்த இராசிகளில் எத்தனை கிரகங்களிருந்தனவோ அத்தனை பேர்கள் அவன் பிறந்த வீட்டிலிருந்தபேர்கள் என்று அறியவும்.
அதில் சனியிருந்தால் அன்னிய ஸ்திரீ ஒருத்தியென்று சொல்லவும்.
சுக்கிரன் சந்திரனிருந்தால் சுமங்கலியென்றும், செவ்வாய், புதன் இருந்தால் அமங்கலியென்றும் சொல்லவும்.
மேஷம், ரிஷபம், சிம்மத்தில் சூரியன், நிற்க, மற்ற கோள்கள் உபயராசியில் பலமாய் நிற்க, பிறந்த குழந்தை இரட்டையாகும்.
அங்காரகன் ஏழாமிடத்திலும், ஆதித்தன் எட்டாமிடத்திலும் நிற்க மற்ற கோள்கள் சரராசியிலிருந்தால் ஒரு பலனுமில்லையென்று அறியவும்.
இலக்கினத்தில் நாலமிடத்தோனும், பாக்கியாதிபதியுங்கூடி சுபக்கிரகங்கள் பார்க்கப் பிறந்தவன் இராஜபூஜிதன்,
சனிக்கு ஒன்று ஏழாமிடத்தில் செவ்வாய் நிற்கவும், சுக்கிரன், சந்திரன், புதன் இவர்கள் பன்னிரண்டாமிடத்தில் நிற்கவும் பிறந்தவன் தன் தகப்பனுடைய தேசத்தில் வாழ்ந்திருப்பானென்று அறியவும்.
இலக்கினத்தைச் சந்திரன் பாராதிருக்க, சந்திரனிருந்த ராசி சரராசியாகயிருந்து அங்கிசமும், சராங்கிசமாக இருக்கப் பிறந்த பாலகன் தகப்பனை தேசாந்திரம் திரிய வைப்பானென்று அறியவும்.
சூரியனுக்கு இரண்டாமிடத்தில் பாவக்கிரகங்கள் நின்று அதுவும் பாவர் வீடாகில் தந்தை தேசாந்திரியாவான்.
பாவக்கிரகங்கள் பாவராசியில் நின்று சூரியனுக்கு ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் இடத்தில் பாவக்கிரகம் நின்றால் தந்தை பரதேசத்தில் சிறைப்படுவானென்று அறியவும்.
அங்காரகனுக்கு பதினொராமிடத்தில் சந்திரன் நிற்க, பிறந்த குழந்தைக்கு தோஷமுண்டு, சுபக்கிரகங்கள் அதைப் பார்க்கில் அந்தக் குழந்தையை இன்னொருவர் வளர்ப்பார்
( சந்தேகம் குழந்தையை இன்னொருவர் வளர்ப்பார் என்று இருக்கிறது அந்த இன்னொருவர் என்பது குடும்ப உறுப்பினர்களா? இல்லை வெளியாட்களா? )
பாபக்கிரகங்கள் சந்திரனைப் பார்க்கில் குழவி சேதமாகும்.
பாக்கியாதிபதி சந்திரனைப் பார்க்கில் தகப்பன் வாழும் மனையில் ஜனனமாகுமென்று அறியவும்