ஜாதக பராசர ஹோரை முதல் பாகத்தில் இருந்து,
எட்டாம் பாவாதி பாபருடன் கூடி அதனுடன் லக்னாதி இணைந்து எங்கிருந்தாலும் அற்ப ஆயுள்.
லக்னாதி பாபருடன் கூடி எட்டாம் பாவத்தில் இருந்தாலும் அல்லது எங்கிருந்தாலும் அற்ப ஆயுள்.
ஆயுளை பற்றி சிந்திக்கும் போது
சனி
பத்தாமாதி,
பாதக ஸ்தான அதிபர்கள்
மாரக ஸ்தான அதிபர்கள்
இவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சந்திரன் இருந்த ஜென்ம ராசி ஜாதகத்தில் சூரியன், நாலில் ( 4 ) சந்திரன், 8 – ல், செவ்வாய் 7 – ல் புதன், 4 – ல் குரு 3 – ல் சுக்கிரன் 6 – ல் சனி, 1 – ல் ராகு 9 – ல் கேது, இரண்டில் இருந்தால் கோச்சாரத்தில் நல்ல பலனை தரமாட்டார்கள்
.இதற்கு கோசார வேதை என்று பெயர்.
சந்திரன் இருந்த ராசிக்கு 3, 6, 10, 11 – ல் சூரியன் இருக்க முறையே 4, 5, 9, 12 – ல் கிரகமில்லாமல் இருந்தால் சூரியன் தானிருந்த ராசியின் பலனை தருவார்.
ஜென்ம ராசிக்கு கோசாரத்தில் இரண்டு 5, 11, 12 – ல் சூரியன் இருக்க முறையே 3, 9, 10, 11 – ல் ஏதேனும் கிரகமிருந்தால் சூரியன் நல்ல பலனை தருவான்.
இது சூரியன் இருந்த ராசியில் இருந்தா அல்லது ஜென்ம ராசியில் இருந்தா என்பது ஆய்வு செய்ய வேண்டிய விஷயம்.
இதற்கு விபரீத வேதை என்று பெயர்.
சந்திரன் நின்ற லக்னத்தில் அஸ்திவாரம் இட்டு புதன் நின்ற லக்னத்தில் வீட்டை கட்டி முடித்து சுக்கிரன் நின்ற லக்னத்தில் ஓடு மூடி அதாவது காங்கிரீட் இட்டு குரு நின்ற லக்னத்தில் கிரக பிரவேசம் செய்ய இப் பூமியில் இந்திர போகம் அனுபவித்து இந்திரனை போல் வாழ்வு சிறக்கும்.
வீட்டிற்கு அஸ்திவார லக்னமும், கிரக பிரவேச லக்னமும், எஜமானருடைய லக்னத்திற்கு வலப்புறமாய் 6 ராசிக்குள் அமைவது சிறப்பு.