மனித வாழ்க்கையில் யோகா
மனிதனுடைய வாழ்க்கையில் ஆரோக்கியம் மிக முக்கியம். ஆரோக்கியமாக வாழ யோகா மனிதனுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆகும். உடலின் உள்உறுப்புகளுக்கு உண்டான பலத்தை தருவதில் யோகாவிற்கு நிகர் யோகா மட்டுமே.
உள் உறுப்புகளின் ஆற்றல்கள் குறையாமல் இருக்கவும், அதனுடைய ஆற்றல்கள் மேம்படவும், யோகா மூலம் செய்ய முடியும். வரும் முன் காத்தல், என்னும் சொல்லுக்கிணங்க யோகாவை சரியான முறையில் முறையாக, ஆசானிடம் பயிற்சி பெற்றால் நம் உடலுக்கு உண்டாகும் கேடுகளை வரும் முன் காக்கலாம்.
பண்டைய காலத்தில் நோய்ற்க்கு தரும், மருந்துகளுடன் உணவு பத்தியத்தையும், எளிய முறை சில ஆசன முறைகளையும், நோயாளிகளுக்கு சொல்லிக்கொடுத்து நோயை நிவர்த்தி செய்து வந்திருக்கின்றனர். 4448 வியாதிகளில் குணப்படுத்த மணி, மந்திரம், ஒளஷதம், போன்றவையுடன், யோகாசனத்தையும் இணைத்து பலன் தந்திருக்கின்றனர்.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும், அதில் உச்சியாய் இருப்பது யோகாசனம் மட்டுமே. தினமும் யோகா செய்யும் ஒரு மனிதன் தனக்கு வரக்கூடிய பல நோய்களை முன் கூட்டியே தடுத்து விடுகிறான். அதனால், அவன் நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும், பெற்று சுகத்துடன் வாழ்கிறான். மனிதன் சுகமாக இருப்பதற்கு அடிப்படையான விஷயம், நோயற்ற உடலே. நூறு வயது வாழ வேண்டிய மனிதன் நூறு வயது வாழவேண்டுமானால், நோயற்ற ஆரோக்கியமான உடல் நிலை தேவை, அப்படி இல்லாவிட்டால், நூறு வயது வாழ்ந்தும் பிரயோஜனம் இல்லை. தினமும் ஒரு முப்பது நிமிடம் யோகசானம் செய்வதானலேயே உடல் பலமும், உள்ள பலமும் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழ முடியும்.
யோகாசனம் செய்வதால் உண்டாகும் பொதுவான நன்மைகள் —- ஒற்றைத் தலைவலி, இரு பக்க தலைவலி, மைக்ரைன் தலைவலி, போன்றவை ஏற்படாது. கண் ஒளி பெறும், கண் புறை ஏற்படாது. தைராய்டு சுரபிகள் நல்லபடியாய் இயங்கும்.
முகம் அழகு பெறும். தோல் மினுமினுப்பு கூடும், மூளை பலம் பெறும், ஞாபக சத்திகூடும், மறதி ஏற்படாது, பல் ஆடாது, மிக விரைவில் பல் நோய் அண்டாது. வாய் துர்நாற்றம் வீசாது. காது நன்றாக கேட்கும். காதின் உள் நரம்புகள் பலத்துடன் இருக்கும்.
செவிப்பறை மிகுந்த சக்தியோடு இயங்கும். சளி சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படாது. ஆஸ்துமா, சைனஸ் தொந்தரவுகள் நம்மை அண்டாது. மலச்சிக்கல் ஏற்படாது, இடுப்பு சதை விழுகாது. பிருஷ்ட பாகங்களில் தேவையில்லாமல் சதை கூடாது. இன விருத்தி உறுப்புகள் பலத்துடன் நல்லமுறையில் இயங்கும். விந்து பலம் அதிகரிக்கும், மலட்டுத்தன்மை நீங்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட எல்லாத் தொல்லைகளும் தீரும்.
ஜீரண சக்தி அதிகரிக்கும், உண்ட உணவு நல்ல முறையில் நல்ல முறையில் செரிமானமாகும். நரம்புகளின்
பலம் கூடும், உடலில் பிராண சக்தியின் ஒட்டம் சீராக நடைபெறும், கைகால் மூட்டு வலிகள் ஏற்படாது, வயதான பின்னும் இளமையோடு இருக்கலாம். இதனுடன் மனோ பலமும் கூடுவதால் எந்த பிரச்சனைகளையும் சரியான படி சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல், நமக்கு உண்டாகும். பயம் கவலை போன்றவை நம்மை அண்டாது. சீறு நீராக கோளாறுகள் ஏற்படாது. கணுக்கால் வலிகள் ஏற்படாது. உடல் பருமன் கூடாது. இந்த அளவுக்கு சிறப்புபெற்ற யோகாசானம் சம்பந்தப்பட்ட விஷயங்களை இப்பொழுது பார்க்கலாம்.
நன்றி ஐயா.
வாழ்க பொருளுடன் வளர்க அருளுடன்.
வணக்கம் ஐயா வலைத்தளம் நன்றாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள் ஐயா.