9. அர்க்கள கிரகத்தினால் உண்டாகக்கூடிய பாபஅர்க்களப்பலனை அந்தக் கிரகத்திற்கு ஐந்தாவது,
ஒன்பதாவது, பாவத்திலுள்ள கிரகம் மாற்றிவிடும்.
10. மேற்சொல்லிய மூன்று, பத்து, பன்னிரண்டில் உள்ளகிரகம் வலிவாக இருந்தால்தான் சுப அர்க்களப்
பலனையோ, பாவ அர்க்களப் பலனையோ மாற்றும்,பலவீனமாயிருந்தால் மாற்றாது.
11. ராசி அர்க்களம் கிரக அர்க்களம் என இரண்டுவிதங்களிருப்பதால் இவற்றால் ஆராய்ச்சி செய்யவும்.
இவைகளில் எவரெவருடைய தசைகள் நடக்கின்றனவோஅவரவர்களின் பலன்களுண்டாகும், எந்த ராசியில்
கிரகமிருந்தாலும் அவருடைய தசையின் புத்தி காலத்தில்பலன் உண்டாகும்.
12. 1 – வது 7-வது பாவங்களாலும் கிரமமாகஅர்க்களங்களுண்டாகிப் பாதகமில்லாதிருந்தால் ஜாதகன்
பாக்கியமடைவான். சந்தேகமின்றி சுபக்கிரகஅர்க்களத்தால் வெகு திரவியம் உண்டாகும். பாபக்கிரக
அர்க்களத்தால் அற்ப தனமுண்டாகும்..
13. சுப பாப அர்க்களங்களிண்டும் உண்டானால் ஒருசமயம் தனவானாவான், எப்போதாவது ஒரு சமயம்
தனத்தின் சிந்தையடைவார்..
14. எந்த ஜாதகத்தில் சுப திருஷ்டியிருந்தால் சுபார்க்களமும்உண்டாகிறதோ அப்போது லக்கினத்திற்கும் சுப
திருஷ்டியிருந்தால் பிரபல உத்தியோகக்கல்பனையுண்டாகும். அவ்விடங்களில் கிரகங்கள்
பார்வையிருந்தாலும் பாப அர்க்களங்களுண்டானால்விபரீத பலனுண்டானால் விபரீதபலனுண்டாகும்.
ஆகையால் லக்கினம், ஏழாமிடம், இவ்விடங்களுக்குஅர்க்களத்தை யோசித்து பாக்கியத்தையோஜிக்கவும்..
15. லக்கின, சப்தம, சுபார்க்களங்களால் பாக்கியம்,பாக்கியத்தின் மேன்மையை அறியவும், சுபார்க் களத்தினால்
விருத்தியும், பாபார்க்களத்தினால் அற்பதனமும் உண்டாகும்இவற்றை ராசி,
கிரக அர்க்களங்கள் இரண்டினாலும்யோசிக்கவும்..