12 – ம் பாவத்தை வைத்துக் கொண்டு மானிதர்களின் வாழ்வில் நிகழும் அனைத்து விஷயத்தையும் கணிதம் கொண்டு அளந்தரிவது சிரமமான காரியம் தான். குருவின் துணையும், திருவின் அருளும் இருந்தால் சிரமமான காரியம் சுலபமான காரியமாக மாறிவிடும் நிஜம் இதுதான். ஜோதிடம் நமக்கு தெரியவேண்டும் என்றால் அதை படிக்க வேண்டும். எப்படி? புத்தகத்திலா? இல்லை ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டும். ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டுமென்றால் ஜோதி நமக்கு தெரியவேண்டும். ஜோதியை நமக்கு சுட்டிக் காட்டப்பட வேண்டும் அது குருவால் மட்டுமே முடியும் அப்படியானால் குருவை கொண்டே ஜோதிடம் படிக்க வேண்டும். அப்படி, படிக்கும் போது பண்டைய மகரிஷிகள் எழுதி வைத்த கிரகந்தங்களின் சூட்சம விஷயங்கள் நமக்கு புரியும். அப்படி புரிய வேண்டுமென்றால் புத்தக அறிவு மட்டும் போதாது என்பதை மனதில் கொண்டு குருவை மனதில் இருத்தி 7 – ஆம் பாவ விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன். 7 – ம் பாவத்தைக் கொண்டு பல விஷயங்களை அறிந்தாலும், அதில் மிக முக்கியமாக எல்லோரும் அறிந்தது களத்திரம், இந்த பாவத்திற்க்கு பெயரே களத்திர ஸ்தானம் என்றுதான். அதனால் நாம் அந்த களத்திரத்தை பற்றியே சிந்திப்போம். 7 – ம் பாவம் காமதிரிகோணத்தில் இரண்டாவதாக வருவது. திரிகோண ஸ்தானம் — 1 – 5 – 9, கேந்திர ஸ்தானம் – 4 – 7 – 10 இந்த ஏழாம் பாவம் மாரக ஸ்தானமும் ஆகும். அடிப்படை விதிகளை கொண்டு பார்க்கும் போது, தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு 7 – ல் பாவிகள் இருப்பது சுப பலனை செய்யும், வளர்பிறையில் பிறந்தவர் களுக்கு 7 – ல் சுபர்கள் இருப்பது அசுப பலனை செய்யும். காரணம் கேந்திராதிபதி தோஷம் , கேந்திராதிபதி தோஷம் சுபகிரகங்களுக்கு மட்டுமே உண்டு இங்கு பொதுவான சுப அசுபர்களை அதாவது குரு பாவர்களுடன் கூடாத புதன் – சுக்கிரன் – சந்திரன் சுபர்கள் சனி – செவ்வாய் – ராகு – கேது , தேய்பிறை சந்திரன் பாவியுடன் கூடிய புதன், சூரியன், அசுபர். இப்படி பார்ப்பதை விட லக்ன ரீதியில் அமையும் சுப அசுபர்களை பார்ப்பது நல்லது. , 5, 9 – அதிபதிகள் சுபர். 1, 4, 7, 10 – அதிபதிகள் முக்கால் சுபர் 6, 8, 12 – அதிபதிகள் அசுபர் 2, 3, 11 – சுபா – அசுபர். 7 – ல் எந்த காரக கிரகம் அமைகிறதோ அது எந்த பாவத்திற்க்கு அதிபதியாக வருகிறதோ, எந்த பாவ அதிபதியால் பார்க்கப்படுகிறதோ, அந்த அதிபதியின் காரகம் எதுவோ, அது எந்த பாவத்திலிருந்து பார்க்கப்படுகிறது என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல நைசர்க நிலையில் அதன் வலிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும். மேலே கூறிய விஷயத்திற்க்கு உதாரணம் – சக்கரம் – ஆண். சந்திரன் – விசாகம் 1 குரு – ரேவதி 1 சுக்கிரன் – உத்திரம் 2 சூரியன் – ஆயில்யம் 3 .மேஷத்தில் லக்னம், 6 – ல் சுக்கிரன், 7 – ல் சந்திரன், 10 – ல் சனி, 12 – ல் குரு. 1. 7 – ல் உள்ள கிரகம், சந்திரன், மனோ, மாதாகாரகன். 2. 4 – ம் பாவத்திற்க்கு அதிபதியாய் வருகிறது. 3. 10, 11 -ம் பாவ அதிபதியால் பார்க்கபடுகிறது. 4. சனியின் காரகம், ஆயுள், வேலையாள். 5. 10 – அதாவது கர்மஸ்தானத்தில் இருந்து பார்க்க படுகிறது. 6. நைசர்க பலத்தில் சனியைவிட சந்திரன் வலிமையானாவர். அடுத்த விதிகள் — 7 – ம் பாவத்தில் கிரகம் இருந்த நட்சத்திரம், அதன் இயற்தன்மை, அதன் அதிபதி, அதன் சுபாவம், அது என்ன காரகம், அது எந்த பாவத்திற்க்கு அதிபதி, 7 – ம் பாவத்தில் உள்ள கிரகத்திற்க்கும் , அதற்க்கும் உள்ள உறவு நிலை, நைசர்க நிலையில் வலிமை இந்த விதிகளின் படி உதாரண ஜாதக நிலை — 1. விசாகம் – பின்ன நட்சத்திரம், அதிபதி – குரு 2. சுபாவம் – சுபர் – இயற்தன்மையில் 3. லக்னபடி – 9 – ம் மாதி, சுபர் – 12 – ம் மாதி அசுபர் 12 – லேயே இருப்பதால் சுபதன்மை மேலும் குறையும். 4. காரகம் – புத்திரகாரகன் – தனகாரகன். 5. குரு – 9 – 12 – க்கு அதிபதி. 6. குரு, சந்திரன் – பகை. 7. குருவை விட சந்திரன் பலவான். 8. 7 – ம் இடத்தில் உள்ள கிரகத்தை குரு பார்க்கவில்லை. இனி அடுத்த விதிகள். 7 – ம் பாவாதி , அவர் உள்ள பாவம், அவர் எந்தெந்த பாவத்திற்க்கு அதிபதி, அவர் இருந்த நட்சத்திரம் அதன் சுபாவம், அதன் அதிபதி அதன் காரகம், அந்த கிரகம் எந்த பாவத்திற்க்கு அதிபதியாய் வருகிறது. பாவாதிபதி, நட்சத்திர அதிபதி, உறவின் நிலை நைசர்க பலத்தின் வலிவு. இதற்க்கு உதாரண ஜாதகக மூலம் விளக்கம் — 1. 7 – ம் பாவாதி சுக்கிரன் 2. அவர் உள்ள பாவம் – 6 – கன்னி 3. 2, 7 – ம் பாவத்திற்க்கு அதிபதி 4. அவர் இருந்த நட்சத்திரம் உத்திரம், பின்ன நட்சத்திரம் – சில முக்கிய சுப விஷயங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். 5. அதன் அதிபதி – சூரியன் 6. சூரியனின் காரகம் – ஆத்மகாரகன், பிதாகாரகன். 7. 5 – ம் பாவத்திற்க்கு அதிபதியாய் வருகிறது. சுக்கிரன் – சூரியன் பகை நிலை சுக்கிரனை விட சூரியன் பலவான். இத்தனை விஷயங்களை திரட்டிய பின் திசாபுத்திக்கு வரவேண்டும். நாம் சேகரித்து வைத்துள்ள விஷயங்களில் உள்ள கிரகங்களான சந்திரன், சுக்கிரன், சூரியன், குரு, சனி இவர்களின் திசா – புத்திகள் ஏதேனும் நடப்பில் உள்ளதா என அறிய வேண்டும். ஜாதகத்தை ஆய்வு செய்து விவரங்களை சேகரித்தாகிவிட்டது. இனி இந்த விபரங்களை கொண்டு எப்படி பலன் சொல்வது. களத்திரம் அமையும் திசை, களத்திர சொரூபம் – களத்திரம் – சொந்தத்திலா – அந்நியத்திலா களத்திர ஜீவனோஉபாய மார்க்கம் களத்திர குண விசேஷம் களத்திர தோஷம் உண்டா களத்திர தோஷமிருந்தால் – அதற்க்கு சாந்தி உண்டா ? எந்த வயதில் களத்திரம் ஏற்படும். இருதார, பலதார விவாக அமைப்பு விவாக அமைப்பு உண்டா? இந்த மாதிரி வினாக்களுக்கு நம்மிடம் உள்ள விபரங்களை கொண்டு ஆய்வு செய்து பலன்களை முடிவு செய்வது எப்படியென்று ஒவ்வொன்றாய் காண்போம். 1. களத்திரம் அமையும் திசை. மேஷம்-ரிஷபம் – கிழக்கு — சூரியன் நடு துலாம் – விருச்சிகம் – மேற்கு — சந்திரன் – தென் கிழக்கு மகரம் – கும்பம் — வடக்கு — செவ்வாய் — தெற்கு கடகம் – சிம்மம் — தெற்கு — புதன் – வடகிழக்கு மிதுனம் – தென்கிழக்கு — குரு – வடக்கு கன்னி – தென்மேற்கு – சனி மேற்கு தனுசு – வடமேற்கு – ராகு — தென்மேற்கு மீனம் – வடகிழக்கு – கேது — வடமேற்கு 7 -ம் பாவம் துலாமாக வந்ததால் – மேற்குதிசை. 7 – ல் சந்திரன் இருப்பதால் – தென்கிழக்கு திசை. 7 – ம் பாவாதி – சுக்கிரன் ஆனதால், கிழக்கு திசை. இதில் நாம் பலன் சொல்லும் போது கிழக்கு, மேற்கு, தென்கிழக்கு திசைகளில் களத்திரம் அமையும் என்று சொல்ல வேண்டும். 2. களத்திர சொரூபம் — 7 – ம் பாவ சரராசி, ஏழாம்பாவாதி சுக்கிரன் எனவே ரூப லாவண்யமும், சஞ்சாரத்தில் பிரியமும் இனிப்பு வகைகளை உண்பதில் ஆசையும் யெவன தோற்றமும், அழகை பராமரிப்பதில் ஆசையும், சாத்வீக குணமும் உடையவன் என்று கூறவேண்டும். 3. களத்திரம் சொந்தத்திலா? அந்நியத்திலா? களத்திரஸ்தானாதிபதி லக்னத்திற்க்கு 6 – ல் களத்திர ஸ்தானத்தில் நிற்கும் கிரகம் களத்திர ஸ்தானாதிபதியாகிய சுக்கிரனுக்கு பகை. எனவே சொந்தத்தில் முறைகள் இருந்தாலும் விரோதம் பகை காரணமாக அந்நியத்தில்தான் களத்திரம் அமையும் சனி ஏழாம் பாவத்தை அதில் உள்ள கிரகத்தை 10 – ம் பார்வையால் பார்ப்பதால் சொந்தத்தில் களத்திரம் அமைய வாய்ப்பில்லை என்று சொல்ல வேண்டும். களத்திர ஜீவனோ உபாயம் களத்திர ஸ்தானம் துலாம் அதன் பத்தாம்மாதி சந்திரன். களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் அது இருக்கும் வீடு கன்னி, அதன் பத்தாமிடம் மிதுனம், அதன் அதிபதி புதன். எனவே, வியாபாரம், சொந்த தொழில், அடுத்தது கணக்கு, பத்திரிகை துறை, என்று குறிப்பிடலாம். களத்திர தோஷம் உண்டா? 1. களத்திர ஸ்தானாதிபதி தன் ஸ்தானத்திற்க்கு 12 – ல் மறைவு. 2. களத்திர ஸ்தானத்தை சனி பார்ப்பது. 3. களத்திரகாரகன், சுக்கிரன் நீசம் பெற்று லக்னத்திற்க்கு 6 – ல் இருப்பது தோஷமே. 4. குரு தன் 7 – ம் பார்வையால் சுக்கிரனை பார்ப்பது தோஷத்திற்க்கு சாந்தி உண்டு என்பதை தெரிவிக்கிறது. 5. களத்திர ஸ்தானத்திற்க்கு குரு 6 – ல் மறைவது தோஷம். இதை கொண்டு பார்க்கும் போது இது களத்திர தோஷமுடைய ஜாதகம் என்ற முடிவிற்க்கு வரலாம். இந்த தோஷத்தினால் விவாகம் நிச்சையம் தடையாகும். 7 – ல் சந்திரன் இளவயதிலேயே திருமணம் நடக்க வேண்டும் என்பது விதி, அனால் அந்த விதி இங்கு செயல்படாது. காலம் கடந்த திருமணம், திருமணத்திற்க்கு பின் அந்நிய ஸ்தீரிகளின் உறவு என்று பலன்கள் நடைபெறும். குரு பார்ப்பதால் சிறிது மட்டுப்படும். சந்திரன் – சுக்கிரன் – சூரியன், குரு, புதன் திசாபுத்தி அந்திர காலங்களில் விவாகம் கைகூடும். இப்படி ஜோதிட புத்தகங்களை படித்து பலன்களை நாம் சிந்தித்தாலும் அது நடப்பில் அனுபவத்திற்க்கு வர அனுபவம் சுருதி, யுக்தி, குரு, மூலம் அனுகிரகம் பெற வேண்டும் என்று கூறி கட்டுரையை நிறைவு செய்கிறேன். Category: ஜோதிடம்By admin@powerathmaJanuary 1, 2021Leave a commentTags: 7 - ஆம் பாவம்DIVINEPOWER AATHMAA .COMகேந்திர ஸ்தானம் - 4 - 7 - 10திரிகோண ஸ்தானம் -- 1 - 5 - 9 Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஒலியற்ற ஒசைNextNext post:சந்தோஷமான விஷயம்Related Postsவியாழன் 15November 10, 2024வியாழன் 14November 9, 2024வியாழன் 13November 8, 2024வியாழன் 12November 7, 2024வியாழன் 11November 6, 2024வியாழன் 10June 25, 2024