சூரியனுக்கும், சந்திரனுக்கும் கட்டுப்பட்டுத்தான் உலகம் இயங்குகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் ஆத்மகாரகன், சந்திரன் மனோகாகரகன் தாய், தந்தையர் ஆவார்.
சூரியனும், சந்திரனும் 0 டிகிரியில் சேரும்போது அமாவாசை ஏற்படுகிறது. சூரியனும், சந்திரனும்
180 டிகிரியில் இருக்கும் போது பெளர்ணமி ஏற்படுகிறது.
சூரியன் 5ம் பாவத்தை அடைந்தால் சந்தானம் தங்காது.
சூரியன் ஒரு ஆண் கிரகம். பகலில் பிறந்த ஜாதகருக்க சூரியன் பிதுர்கிரகம்
சிம்மம் ஆட்சி வீடு, மேஷம் உச்சவீடு, துலாம் நீசவீடாகும்.
சூரியன் & செவ்வாய் லக்னத்தில் நின்றிடில் நல்ல சுறுசுறுப்பு, முன்கோபமுடையவர்.
சூரியன் மேஷராசியில் உச்சமாக இருந்தால் ஜாதகரது தந்தைக்கு யோகம்.
சூரியன் நீச்சமுற்று ஐப்பசி மாதம் பிறந்தாருக்கு அரசுவழி உத்யோகம் கிடைப்பதரிது.
சூரியன் நீசராசியான துலாத்தில் இருந்தால் தந்தையின் யோகத்திற்கு பங்கம் ஏற்படும்.
சூரியன் 12ல் அமர்ந்திருப்பின் மறுபிறவி இல்லை.
சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றிட 6, 8, 12ல் இல்லையெனின் அரசு வழி உத்தியோகம் ஏற்படும்.
சூரியன், சந்திரன், செவ்வாய் 4, 5 மற்றும் 6ம் வீடுகளில் இருந்தால்
அப்பெண் கர்ப்பச் சிதைவு செய்து கொள்வாள்.
திருமணமாவதற்கு முன்பே பதிசுகத்தை அனுபவிப்பாள்.