7. ஜென்ம லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் தூமனிருந்தால் தனமில்லாதவன், எப்போதும் காமமுடையவன், பரதார கமனன், தேஜசில்லாதன். 8. ஜென்ம லக்கினத்திற்கு எட்டாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் பராக்கிரமமின்றி உற்சாகமுடையவன், பொய் பேசுபவன், இஷ்டமில்லாமல் நிஷ்டூரமாய்ப் பேசுபவன். 9. ஜென்ம லக்கினத்திற்கு ஒன்பதாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் புத்திர சம்பத்து முதலிய உடையவன், மானி, தனமுடையவன், தனத்துடன் கூடியவன், பந்துக்களை ரக்ஷிப்பவன். 10. ஜென்ம லக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் புத்திராதி ஸெளபாக்கியங்களுடையவன், அறிவாளி, சுகி, சந்தோஷி, உண்மையான வழியில் இருப்பவன். 11. ஜென்ம லக்கினத்திற்குப் பதினொராமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் தன, தான்னியம், செரர்ணம் முதலியவை சம்பாதிப்பவன், ரூபவான் , வித்தையுடையவன், தேஜசுடையவன், வினயமுடையவன். சங்கீதமறிந்தவன். 12. ஜென்ம லக்கினத்திற்குப் பன்னிரண்டாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் ( பதியின் ) துயரமுடையவன் பாபச் செய்கையுடையவன், பரதாரகமனம் செய்பவன், விசனமுடையவன், தயையில்லாதவன், சடன், வஞ்சகன், மூடன், மூர்க்கன். Category: ஜோதிடம்By admin@powerathmaApril 4, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMசெரர்ணம்தனதான்னியம்தேஜசுதேஜசுடையவன்மூர்க்கன்.ரூபவான்வித்தையுடையவன் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:பயம் என்றால் என்னNextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 24Related Postsசுக்கிரன் 8February 28, 2025சுக்கிரன் 7February 27, 2025சுக்கிரன் 6February 26, 2025சுக்கிரன் 5January 31, 2025சுக்கிரன் 4January 30, 2025சுக்கிரன் 3January 29, 2025