துலாம் “துலாத்தான் எவ்விடத்திலும் தோளான்” என்ற இந்த ராசி, நீதியின் தன்மையை உணர்த்தும் பாவ, புண்ணியங்கள் எடையிடும் வண்ணம் தராசு போல தோற்றமுடைய அமைப்பை உடைய இந்த ராசி வான மண்டலத்தில் 180 டிகிரி பாகை முதல் 210 பாகை வரை பரவியுள்ளது. கால புருஷனின் ஏழாவது ராசியாகிய இது தென்முக ராசியில் முதல் ராசியாகும். விஷவரேகைக்குரிய ராசியில் இரண்டாவது ராசியாகும். ஓஜை , எனப்படும் ஒற்றை ஆண்ராசி எனவே இது உறுதியானது பலங்கொண்டது. அதிக ஆற்றலில் நம்பிக்கை கொண்ட சர ராசி அதனால் துணிவாக செயல் படுதல் பேராசையின் மீது அதிக விருப்பமும் உடையது. காற்று ராசியானதால் மனோ பலமும் மனோ ரீதியாய் செய்யப்படும் அனைத்து காரியங்களில் வெற்றியும் மிகச் சிறந்த கற்பனை வளமும் கலைகளில் ஈடுபாடும் உடையது அரை பயன் உள்ள ராசி சிரோதய ராசி எனவே பகலில் பலமுடையது. தமோ குணத்தையுடையது இதன் அதிபதி சுக்கிரன் ஆகும் இது மேற்கு திசையை குறிக்கும். சனி பகவான் இந்த ராசியில் உச்ச பலம் அடைகிறார் சூரியன் நீச்சம் அடைந்து பலம் இழக்கிறார் சந்திரனும், செவ்வாயும் சமம் என்ற அந்தஸ்தை அடைகிறார்கள் குருவுக்கு பகைவீடாகவும் மற்ற கிரகங்களுக்கு நட்பு வீடாகவும் அமைகிறது. முதல் 10 பாகை முதல் திரிகோணம் ஆண் தன்மை உடையது. மனித உருவம் அதிபர் சுக்கிரன். இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம் ஆண் தன்மை பறவையின் உருவம் அதிபர் சனி பகவான். மூன்றவாது 10 பாகை மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை நாற்கால் ஜீவன் குரங்கின் உருவம் அதிபர் புதன் இது 1 பாகை 2 மைலை குறிக்கும். படுக்கை அறைகள், உள் அறைகள், கண்ணாடி இயந்திரங்கள் அதிக காற்றோட்டமுள்ள இடங்களை குறிக்கும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaOctober 21, 2020Leave a commentTags: divine power athmaகோள்களின் கோலாட்டம்துலாம்நீதி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:காசான் (memecylon umbellatum)NextNext post:கோணாசனம் — KONASANAMRelated Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024