சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்.
பொதுநலத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்,
சுயநலத்தை நினைத்தாலே இவர்களுக்கு
மற்றவர்களின் மேல் வெறுப்பு தானாக ஏற்படும்.
பெரும்பாலும் இவர்கள் பொதுச்சேவை புரிவதால்
இவர்களை மகான் என்றும்,
மேதை என்றும் போற்றுவார்கள்.
மற்றவர்களுக்கு வழிகாட்டும் தலைமை ஸ்தானம் பெறுவார்கள்,
பெருமையும், புகழும் உடையவர்கள்.
ஸ்திரபுத்தி இருக்காது
ஏற்றத்தாழ்வுகள், பிணி, நலி, கண்டங்கள்
வாழ்வில் பல முறை குறுக்கிடும்.