எந்த மனிதனும் எப்போதும் துன்பத்தை
அனுபவித்துக் கொண்டே இருக்கமுடியாது. எவனும்,
ஆயுள் முழுவதும் துயரத்திற்கு ஆளாக மாட்டான்.
ஒவ்வொரு செயலும் முறையே அதனதன் பயனைத் தருகின்றது.
அதற்கேற்பச் சந்தர்ப்பங்களையும் ஒருவருக்கு கொணர்கிறது.
என் குழந்தை சேற்றையும், புழுதியையும் பூசிக்கொண்டிருந்தால்,
அதைக் கழுவி என் மடிமீது அமர்த்திக்கொள்வது என் கடமையல்லவா?