ஒரு சாது எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும்.
அவனது மார்க்கம் வழுக்கலுடையதாதலின் மிகவும் எச்சரிக்கையாக
அவன் அடியெடுத்து வைத்து அதில் நடக்க வேண்டும்.
சன்னியாசி ஆவது ஒரு விளையாட்டான காரியமா?
அவர் எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து பார்க்கலாகாது,
தெருவில் செல்லும்போது அவரது பார்வை அவரது கால் கட்டை விரலின் மீதே பதிந்திருக்க வேண்டும்.
கழுத்தில் பட்டயம் அணிந்திருக்கும் நாய் எவ்வாறு ஏனைய தெரு நாய்களைப் போல்
கொல்லப்படுவதினின்றும் காக்கப்படுகின்றதோ,
அது போல் சன்னியாசியின் காவி நிற ஆடை, அவரைத் தீங்கினின்றும் காப்பாற்றுகின்றது.