புத்தகம் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிற்குக்கூறிய புத்திமதியாவது,
”எவருடனும் மிகவும் நெருங்கிப் பழகாதே. குடும்பத்திலே பலர் கூடி நடத்தும் கொண்டாட்டங்கள் எதிலும்
அதிக அளவு பங்கெடுத்துக் கொள்ளாதே எப்போதும் மனத்தை நோக்கி
‘ மனமே, அடக்கமாக இரு ‘ என்று சொல்,
பிறரைப்பற்றி அறிய ஆவல் கொள்ளாதே. தியானம், பிரார்த்தனையும் செய்யும் நேரத்தைக்
கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக்கொண்டு வா”.
தூய அன்னையார் தம்முடைய மற்றொரு சீடப் பெண்ணிற்கு கூறிய எச்சரிக்கையாவது,
” எந்த ஆணுடனும், உன்னுடைய தந்தையாயினும் சகோதரனாயினும் சரி, நெருங்கிய தொடர்பு கொள்ளாதே.
பின் பிறரைப் பற்றி உரைப்பானேன்?
கடவுளே மனித உருவில் உன்னிடம் வந்தாலும் கூட, அவருடன் நீ நெருங்கிய உறவு கொள்ளலாகாது.