பெண்கள் வெகு எளிதில் கோபத்திற்கு அளாதல் கூடாது.
அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கப் பழக வேண்டும்.
குழந்தைப் பருவத்திலும் பால பருவத்திலும் பெற்றோர்களும்,
வாலிப வயதில் அவர் தம் கணவருமே பெண்களுக்குக் காப்பாவர்.
பொதுவாக அவர்கள் ‘ ரோஷ ‘ முடையவர்கள்.
ஒரு வார்த்தையே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும்.
இக்காலத்திலோ மொழிகள் அவ்வளவு சகாயம்.
ஆகவே, அவர்கள் துன்பம்நேரும் காலத்தும் பொறுமையுடன்
பெற்றேருக்கோ கணவருக்கோ அடங்கியொழுக முயலவேண்டும்.