அநேக நோன்புகள் நோற்றலின் பயனாகவே மனத்தைத் தூயதாக்க முடியும்.
இறைவன் தூய்மை உருவினன். ஆதலின் நோன்பின்றி அவனைக் காணமுடியாது.
ஒருவன் நாள்தோறும் பதினையாயிரம் முதல், இருபதினாயிரம்
வரை இறைவன் பெயரை ஜபிப்பானாகில், மனத்தை நிலைநிறுத்த முடியும்.
இது முற்றிலும் உண்மை. நானே அதை உணர்ந்திருக்கிறேன்.
இம்முறையை அவர்கள் கடைப்பிடிக்கட்டும். முயற்சியில்
தோல்வியைடந்தால், பிறகு முறையிடலாம்.
அடங்கிய மனத்தோடு ஒரு முறை இறைவன் பெயரை உச்சரிப்பதானது,
அலைக்கழிக்கப்படுகின்ற மனத்தினால் இலட்சம் தடவை
அப்பெயரை உச்சரிப்பதற்கு ஈடாகும். நீங்கள் நாள் முழுவதும்
இறைவன் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால்
மனம் மட்டும் வேறிடத்தில் இருக்குமானால், உங்கள் ஜபம்
அதிக பலனைத் தராது. நீங்கள் ஜபம் செய்யும்போதே ஒரு முகமான மனதும் வேண்டும்.