கேள்வி –
அம்மா, என் மனம் அடிக்கடி அமைதியை இழந்து சிற்றின்பத்தையே
நாடுகிறது. இது என்னை அச்சுறுத்துகிறது.
பதில் –
இதற்காக நீ பயப்பட வேண்டாம். இக்கலியுகத்தில் மனத்தால் தீங்கு
நினைத்தால் பாவமாகாது என்பதை நான் உனக்கு அறிவுறுத்துகிறேன்.
இக்காரணத்தால் ஏற்படும் கவலைகளினின்றும் உன் மனத்தை விடுவி.
இதற்காக நீ அஞ்ச வேண்டா.

