கேள்வி – தெய்வீக அருள் எப்போது எனக்குக் கிட்டும்?
பதில் – தவம் செய்வதால் மட்டும் தெய்வத்தின் அருள் கிடைத்துவிடும் என்ற நியதி இல்லை
பழங்காலத்தில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தலைகீழாகத் தொங்கியும் தீயிடை நின்றும்
மகரிஷிகள் தவம் செய்தனர். அப்போதும் கூட ஒரு சிலரே கடவுளின் அருள் பெற்றனர்.
கேள்வி – அன்னையே எவ்வளவோ தவம் செய்தேன், எவ்வளவோ ஜபமும் செய்தேன்.
ஆனால் அடைந்த பலன் ஏதுமில்லையே?
பதில் — விலை கொடுத்து வாங்கக் கடவுள் காய்கறி அல்லவே.
கேள்வி – அன்னையே அடிக்கடி நான் உங்களிடம் வருகிறேன்.
உங்கள் அருளும் பெற்றதாக நம்புகிறேன். ஆயினும் நான் ஏதும் உணரவில்லை.
பதில் – குழந்தாய், நீ தூங்கும் போது கட்டிலோடு தூக்கி உன்னைப் பிறர் வேறிடத்தில் வைத்துவிட்டால்
விழித்தவுடன் நீ புதிய இடத்தில் இருப்பதை உணர முடியுமா?
முடியாதே,
தூக்க மயக்கம் பூரணமாக நீங்கிய பிறகே நீ புதிய இடத்திற்கு வந்திருப்பதை உணரமுடியும்