ஆத்மா அறிவு மயமானது, பரிசுத்தமானது, உடல் மாம்ஸமயமானது. அழுக்கடைந்தது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக்கூறலாம்? ஸத்ரூபமாகிய ஆத்மா அழிவற்றது, அஸத்ரூபமாகிய உடல் தோன்றி மறைவது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக் கூறலாம்? மண்ணாலான குடம் முழுதும் எப்படி மண்ணாகவே இருக்கிறதோ அப்படி பிரம்மத்தாலான உடல் பிரம்மமே. ஆகையால் ஆத்மா என்றும் அனாத்மா என்றும் அஞ்ஞானிகள் பிரித்துக் கூறுவது அர்த்தமில்லாதது. கண்ணில் ( காமாலை ) தோஷமுள்ளவனுக்கு வெள்ளையான பொருள்கள் மஞ்சளாய்த் தோன்றுவது போல் அஞ்ஞான தோஷ முள்ளவனுக்கு ஆத்மா உடலாகவே தோன்றுகிறது. Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaMarch 24, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஅஞ்ஞானம்அஞ்ஞானிஆத்மாஞானிமண்மனிதர்கள் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?NextNext post:அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 2Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023