விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மாறுபாடுகளை
உடைய சித்த விருத்தியைப் பிரகாசப்படுத்திக் கொண்டு
எங்கும் நிறைந்ததாயும் எல்லா உயிர்களிலும் ஒன்றாயுமிருக்கும்
ஆத்மா அனைத்திற்கும் சாக்ஷியாயுளது.
ஆத்மா கண்டனுபவிக்கப்பட்டால் இருதயத்திலுள்ள
முடிச்சுகள் அவிழ்கின்றன.
சந்தேகங்களெல்லாம் ஒழிகின்றன.
கருமங்களெல்லாம் நாசமடைகின்றன என்று உபநிஷதம் கூறுகிறது.