ஆத்மா எப்பொழுதும் அடையப்பட்டதாயிருப்பினும்
அஞ்ஞானத்தால் அடையப்படாததது போல் தோன்றுகிறது.
அஞ்ஞானம் நீங்கியதும் ஒருவன் தன் கழுத்தில் ஏற்கனவே
இருந்த ஆபரணத்தைக் கண்டு கொள்வது போல் ஆத்மா
அடையப்பட்டது போல் பிரகாசிக்கிறது.
உலகனைத்தும் ஆத்மாவே, ஆத்மாவிற்குப்
புறம்பாக ஒரு சிறிதுமில்லை.
குடம் முதலியவை மண்ணெனக் காண்பது போல்
ஞானி அனைத்தையும் ஆத்மாவாய்க் காண்கிறான்.