எவர்கள் ஒப்புயர்வற்றதும் பரிசுத்தமானதுமான
பிரம்மபாவத்தை நாடவில்லையோ அவர்கள்
பிறவியில் மனிதர்களாயினும் வாழ்க்கையில்
மிருகங்களுக்கு ஒப்பாவர். அவர்கள் வாழ்க்கை வீண்.
காணும் உலகைக் காணதது போல் கருதி ஒருவன்
அனைத்தையும் பிரம்மம் என்று உணரவேண்டும்.
புத்திமானாகிய அவன் தன் மனதைச் சிதானந்த ரஸத்தால்
நிரப்பி அந்த எல்லையிலா ஆனந்தத்தில் எப்பொழுதும் நிலைபெற வேண்டும்.