ஆகையால் நீ பிரம்மம். நான் பிரம்மம் அல்லன் என்பது மாயை.
மாயையினின்று உதிப்பது வேற்றுமை.
எல்லாத் துன்பங்களுக்கும் அதுவே வேர்.
பிரம்மம் ( மனதால் ) அறிய முடியாததென்றாலும்,
ஸ்வயம் பிரகாசமாயிருப்பதால் அனுபவிக்க முடியாததன்று.
( ஸத்யம் ஞானம் ஆனந்தம் ) பிரம்மும், ஸத்தியமும், ஞானமும் எல்லையற்றதாகும்
என்ற வேதாந்த வாக்கியம் அதை விளக்குகிறது.